புதன், 13 டிசம்பர், 2017

பள்ளிக்கு சொந்த நிலத்தை தானாமாக வழங்கியவர் பெரியபாண்டி - சொந்த ஊர் மக்கள் கண்ணீர்


Mayura Akilan - Oneindia Tamil சென்னை: ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த வன்னிக்கோனேந்தல் மூவிருந்தாளி அருகே உள்ள சாலைப்புதூர் கிராமம் ஆகும். இவர் தனது சொந்த நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார். கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக சென்ராம், சங்கர்லால் உட்பட 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகளான சென்ராமின் மகன் நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரியை பிடிக்க 6 பேர் கொண்ட தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர். ஜெய்ப்பூர் அருகே பாலி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் செங்கல்சூளையில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது. பெரியபாண்டி வீர மரணம் பெரியபாண்டி வீர மரணம் தனிப்படையில் இடம்பெற்றிருந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உயிரிழந்தார்.
மேலும், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் காயமடைந்துள்ளார். ராஜஸ்தான் போலீசார் தமிழக போலீசாருக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்காததே ஆய்வாளர் பெரியபாண்டி உயிரழப்புக்கு காரணமாகக் கூறப்படுகிறது. காக்கிச் சட்டை காதலன் காக்கிச் சட்டை காதலன் 04-03-1969 ஆம் ஆண்டு பிறந்தவர் பெரியபாண்டி. 2000 ஆண்டு போலீஸ் வேலைக்கு தேர்வான பெரியபாண்டி திருச்சியில் பயிற்சி பெற்றார். அங்கு பயிற்சியை முடித்த அவர் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணிக்கு சேர்ந்தார். 
 பின்பு தேர்வு எழுதி சப் இன்ஸ்பெக்டர் ஆனார். காக்கிச்சட்டையை காதலித்துள்ளார் பெரியபாண்டி. சோகத்தில் சொந்த ஊர் சோகத்தில் சொந்த ஊர் அதன் பிறகு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று சென்னையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில் அக்கும்பலால் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் இன்ஸ்பெக்டரின் சொந்த ஊரான சாலைப்புதூர் கிராமமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 
மனைவி, மகன்கள் மனைவி, மகன்கள் பெரியபாண்டியின் மனைவி பானு ரேகா, சுந்தர சோளபுரம் அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ரூபன் மற்றும் ராகுல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது தந்தை செல்வராஜ். தாயார் ராமாத்தாள். பெரும் நிலக்கிழாரான செல்வராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 
ரூபன் கல்லூரியிலும், ராகுல் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டிக்கு, ஜோசப், அந்தோணிராஜ் என்ற சகோதரர்களும், சுந்தரத்தாய், சீனித்தாய், சகுந்தலா என்ற சகோதரிகளும் உள்ளனர். பள்ளிக்கு நிலம் தானம் பள்ளிக்கு நிலம் தானம்


tamilthehindu :
ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியுடன், இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் தனிப்படையினர் ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியுடன் இருந்து பலத்த காயமடைந்த கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தன் குடும்பத்தாரிடம் நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே என்று கதறி அழுதுள்ளார்.
சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்து தப்பிச்சென்ற நாதுராமையும், தினேஷ் சதுர்வேதியையும் பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டி, முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் பாலிக்கு சென்றது. நேற்றிரவு கொள்ளையர்களை பிடிக்க நள்ளிரவு 2.30 மணி அளவில் அவர்கள் மறைந்துள்ள கிராமத்திற்குள் சென்ற தனிப்படையினரை ஏற்கெனவே தகவல் தெரிந்த நிலையில் மறைந்திருந்து செங்கற்களால் சரமாரியாக கிராம மக்களுடன் சேர்ந்து நாதுராம் தாக்கி உள்ளான். இதில் முனிசேகர் முகத்தில் பலத்த காயமடைந்து கீழே விழுந்தார். இரும்பு ராடால் தாக்கப்பட்டு கீழே விழுந்த பெரியபாண்டியின் துப்பாக்கியை பிடுங்கி அவரை சுட்டுகொன்று விட்டு அந்தக் கும்பல் தப்பிச்சென்றது.
இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவத்தை கேட்டு பதறிப்போன முனிசேகரின் குடும்பத்தார் அவரைத் தொடர்பு கொண்ட போது போனில் பேசிய முனிசேகர் தன்  மூக்கு உடைந்து ரத்தம் கொட்டுகிறது மற்றபடி பிரச்சினை இல்லை என்று கூறியவர், திடீரென உடைந்து அழ ஆரம்பித்துள்ளார்.
அவரது குடும்பத்தார் பதறிப்போய் என்ன என்று கேட்ட போது உடனிருந்த நண்பர் பெரியபாண்டியை கண்ணெதிரில் கொன்று விட்டார்களே என்று கதறி அழுதுள்ளார்.
குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். முனிசேகரை சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்

கருத்துகள் இல்லை: