வியாழன், 23 நவம்பர், 2017

உடைகிறதா மோடியின் குஜராத் வளர்ச்சி பிம்பம் - கைப்பற்றுமா காங்கிரஸ்

Special Correspondent FB Wing  : 1995-ம் ஆண்டிலிருந்து குஜராத்தை தொடர்ந்து ஆட்சி செய்து வருவது பா.ஜ.க-தான். இந்த 22 ஆண்டுகளில் 13 ஆண்டுகள் நரேந்திர மோதி முதல்வராக இருந்திருக்கிறார்.
ராகுல் காந்தியின் புகைப்படத்தை 18 வயது காஜலிடம் காட்டியபோது, அவர் புகைப்படத்தில் உள்ள நபர் ஹர்திக் பட்டேல் என்றார்.
இந்த தேர்தலில்தான் முதன்முறையாக வாக்களிக்கப் போகும் கஜோல் விஷ்ணு இருவருக்கும் காங்கிரஸைப்பற்றியோ, அதன் இளம் தலைவரைப் பற்றியோ தெரியவில்லை.
பொருளாதார நிலை காரணமாக, அவர்கள் இருவரும் எட்டாம் வகுப்பு வரைதான் படித்து இருக்கிறார்கள். விஷ்ணு தினக்கூலியாக பணியாற்றுக்கிறார். காஜல் தையற்கலை கற்றுவருகிறார். அதன் மூலம் பணம் ஈட்டுவது அவரது நோக்கம். காஜல் தன் கிராமத்தின் வளர்ச்சியை விரும்புகிறார். மின்சாரம் வேண்டும், கழிப்பறை வேண்டும் என்கிறார்.
எங்களின் பிரச்னைகள் குறித்து யாரும் கவலைக் கொள்ளவில்லை என்று சொல்லும் அவர்கள், "மோதி ஒருபோதும் இங்கு வரமாட்டார். அவர் ஆகாயத்தின் வழியாகவே பறந்து சென்றுவிடுவார். கீழே வந்தால்தானே நாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் புரியும்? ஆனால், இந்த நிலைக்கு மாற்றும் இல்லை."

இப்படி பல எதிர்மறையான கருத்துகள் இருந்தாலும், இவர் வயதுடைய யுவன்களும், யுவதிகளும் மோதியை ஆதரிக்க என்ன காரணம்?
காஜல் தனது சித்தி வீட்டிற்கு சென்றபோது, ​​ தொலைக்காட்சியில் நரேந்திர மோதியின் உரையைப் பார்த்திருக்கிறார். மோதி அவருக்கு பரிச்சயமான தலைவர். அகமதாபாதின் நரோடா பகுதியில் மோதி நன்கு அறியப்பட்டவர் என்பதைத்தவிர இந்த வயது யுவதி ஒருவர் பா.ஜ.க-வுடன் இணைவதற்கு வேறொரு காரணமும் உள்ளது.
சில இளைஞர்களை சந்தித்தால், பல்வேறு விசயங்கள் புரியும்.
சுபாஷ் காட்வி அரசுப்பணிக்காக தேர்வுகள் எழுதி வருகிறார். "ராமர் ஆலயம் கட்டுவோம் என்று யாராவது சொன்னால், அவருக்கு நீங்கள் வாக்களிக்க மாட்டீர்களா?" என்று கேட்கிறார். முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் கடந்து செல்வதாக இருந்தால் இப்போதும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது என்கிறார் இவர்.
கோத்ரா சம்பவம் நடந்து 15 வருடங்கள் ஆனபோதிலும், எப்போது வேண்டுமானாலும் சண்டை நடக்கலாம் என்றே நிலையே நிலவுகிறது. மேலும், அரசியலில் பாதுகாப்பின்மை என்ற சிக்கலும் அதிகம்.
கோத்ரா சம்பவம் நடந்து 15 வருடங்கள் ஆனபோதிலும், எப்போது வேண்டுமானாலும் சண்டை நடக்கலாம் என்றே நிலையே நிலவுகிறது.
ஆனால், பாதுகாப்பான குஜராத்தில் இதுவரையிலான வாழ்க்கை நன்றாக இருக்கிறதா என்று நான் கேட்டால், இல்லை என்றே அனைவரும் ஒருமித்த குரலில் பதிலளிக்கிறார்கள் இருவரும் .
வேலைவாய்ப்பின்மைதான் இங்கு முக்கியப் பிரச்சனை. அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுக் கொண்டே இருந்தபோதிலும், கிராம அளவில் எந்த நிறுவனங்களும் திறக்கப்படவில்லை. கிராமத்தில் காற்றாலைகள் அமைப்பதற்காக, மூதாதையர்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த நிறுவனமும் இரண்டு ஆண்டுகளில் மூடப்பட்டுவிட்டது. எந்த புதிய வேலைவாய்ப்புகளும் இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை.
சில நிறுவனங்கள் திறக்கப்பட்டாலும், அதில் உள்ளூர் ஆட்களுக்கு வேலை கொடுப்பதில்லை. அதுமட்டுமல்லாமல், இடஒதுக்கீட்டால், தாங்கள் ஏமாற்றப்படுவதாக இளைஞர்கள் நினைக்கிறார்கள்.
அவர்கள் சொல்கிறார்கள், "தண்ணீர் குழாய் கூட சரியாக இணைக்கப்படவில்லை. காலைவேளையில் ஒருமுறை மட்டும்தான் தண்ணீர் வருகிறது. ஒருபுறம் அரசாங்கம் மீது கோபம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆளுங்கட்சி என்ற பய உணர்வும் இருக்கிறது." என்கிறார்கள் .
அகமதாபாத்தில் தலித் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் ஜிக்னேஷ் சந்திரபாலும் அவரது நண்பர்களும், , தங்கள் சமுதாயத்தின் ஏழை மக்களுக்கு வளர்ச்சி ஏற்படவில்லை என்று கூறுகிறார்கள்.
நாங்கள் கூடிபேசும் பள்ளிவளாகத்திற்கு வருவதற்கு சரியான சாலை வசதி இல்லை. கட்டத்தில் மின்சாரம் இல்லை.அதுமட்டுமல்ல, அந்த பள்ளிக்கூடத்தில் அறைகள் பற்றாக்குறையாக இருக்கிறது, ஆசிரியர்களோ அவ்வப்போதுதான் வந்து செல்கின்றனர், என்கிறாகள் அவர்கள்.
அகமதாபாதிலிருந்து மூன்று மணி நேரம் தொலைவில் உள்ள கோத்ரா நகரைச் சேர்ந்த 21 வயது சுஹைல், பொறியியல் பட்டதாரி, வேலை தேடிக் கொண்டிருக்கிறார். சுஹைல் சொல்கிறார், "கோத்ராவிற்கு வரும் நெடுஞ்சாலைகள் பளபளப்பாக இருக்கின்றன. ஆனால், உள்ளே வந்துபார்த்தால், மோசமான சாலைகளையே பார்க்கமுடியும். அவர்கள் வீடும் அகமதாபாத்தில் இருக்கும் தலித் குடியிருப்பைப்போன்றே காட்சியளிக்கிறது.
"இந்த பகுதியில் பெரிய தொழிற்சாலைகளும் இல்லை. சிறு-குறு வியாபாரம்தான் இளைஞர்களின் வாழ்வாதாரம். வேலை இல்லாததுதான் இங்கே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது."என்கிறார் அவர்.
சுஹைலின் நெருங்கிய நண்பரான கோரா, "கோத்ராவில் பொறியியல் படித்த மூன்று பேரில் இருவர் வேலையில்லாமல் இருக்கின்றார்கள்" என்று சொல்கிறார்.
கோத்ராவில் பொறியியல் படித்த மூன்று பேரில் இருவர் வேலையில்லாமல் இருக்கின்றார்கள். அவருக்கு ராகுல் காந்தி மீது நம்பிக்கை இருக்கிறது. அவர் சொல்கிறார், "இவ்வளவு ஆண்டுகளாக ஒரு கட்சியை நம்பினோம், எதுவும் நடைபெறவில்லை, வேலைவாய்ப்பின்மையை துடைத்தெறிவதாக ராகுல் காந்தி உறுதியளித்து இருக்கிறார். அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்த்தால்தான் என்ன?"
இந்த தேர்தலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால்?
இதற்கு வறட்சியுடன் சிரித்துக் கொண்டே சொல்கிறார் அவர், "பிறகென்ன? வளர்ச்சி என்று சொல்வதே முட்டாள் தனமாகிவிடும்.

கருத்துகள் இல்லை: