ஞாயிறு, 19 நவம்பர், 2017

ரபேல் போர் விமான ஊழல் மோடி அம்பானி கூட்டு களவாணிகள்

ரபேல் போர் விமானங்களை வாங்கும் விவகாரத்தில், நமது பிரதமர் மோடி அவர்கள் ஒரு மிக பெரிய வாழ்வியல் தத்துவத்தை நாட்டு மக்களுக்காக உணர்த்தி இருக்கிறார். நட்பின் மகத்துவத்தை பறை சாற்றியிருக்கிறார்.
பின் வரும் விவரங்களை பார்த்தால் உங்களுக்கே புரியும்.
2012ஆம் ஆண்டு
1.காங்கிரஸ் அரசு 126 ரபேல் விமானங்களை சுமார் 90000 கோடி ரூபாய்களுக்கு வாங்குவதற்கு ரபேல் டஸ்ஸால் (Rafale Dassault) என்ற பிரெஞ்சு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுகிறது.
2 .ஒரு விமானத்தின் விலை ரூபாய் 714 கோடி
3. அந்த பிரெஞ்சு நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் (HAL) என்ற இந்திய பொது துறை நிறுவனத்தோடு தொழில் நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்திற்கும் ஒத்து கொள்கிறது.
இந்த தொழில் நுட்ப பரிமாற்றம் மிக முக்கியம், இதன் மூலம் அந்த விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறனை நாம் அடைவோம்.
2015 ஆம் ஆண்டு
1. பிரதமர் மோடி பிரெஞ்சு நாட்டுக்கு விஜயம் செய்கிறார், கூடவே அணில் அம்பானியும் செல்கிறார். அங்கு ஏற்கனெவே இந்திய அரசாங்கம் ரபேல் விமானம் வாங்க செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, 36 விமானங்களை 60000 கோடி ரூபாய்க்கு வாங்க புது ஒப்பந்தம் போடுகிறார்.
2. ஆக ஒரு விமானத்தின் விலை இப்பொழுது ரூபாய் 1666 கோடி.
3. இதில் மற்றுமொரு அம்சம் என்னவென்றால், இப்பொழுது தொழில் நுட்ப பரிமாற்றம் கிடையாது. ரபேல் நிறுவனமும் அணில் அம்பானியின் நிறுவனமும் சேர்ந்து புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்கி இந்த விமானத்தை பராமரிக்கும், பழுது பார்க்கும் பணியை செய்ய வேண்டும் என்று புது ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் பொழுது மோடி அவர்கள் எந்த விதமான நடைமுறைகளையும் பின்பற்றவில்லை என்பது கூடுதல் சிறப்பு.
பல்வேறு கடன் பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் அணில் அம்பானி புது கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக இந்திய மக்களின் வரி பணத்தில் இருந்து ஒரு விமானத்திற்கு 1000 கோடி ருபாய் அதிகம் கொடுத்து 36 விமானங்கள் வாங்குகிறார் மோடி என்றால்?
இந்திய திரு நாட்டிற்காக அவர் ஆற்றி வரும் அளப்பரிய பணியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
அவர் அணில் அம்பானி மீது கொண்டிருக்கும் நட்பின் திண்ணத்தை எண்ணி எண்ணி வியக்க வேண்டும்!
இதை விடுத்தது இதை ஊழல் என்றோ, முறைகேடு செய்தார் என்றோ குற்றம் சாட்டுவீர்களேயானால் உங்களை தேச விரோதி என்று தானே முத்திரை இட முடியும்
Saravanan Anna Durai

கருத்துகள் இல்லை: