திங்கள், 11 செப்டம்பர், 2017

இன்னும் தமிழில் நல்ல Motivating books வரவே இல்லை...

karthikeyan Fastura : ஒரு ஷோ முழுதும் ஸ்டார்ட்அப் பிசினஸ் பண்றவங்களை குற்றம், குறை, நக்கல், நையாண்டி எல்லாம் செய்துவிட்டு இறுதியில் கொஞ்சம் நல்லவிதமாக அதுவும் வந்திருக்கும் விருந்தினர் சொன்னபிறகு புத்தி வந்து சொல்வதெல்லாம் #நீயாநானா வில் மட்டுமே காணமுடியும். நிஜத்தில் என்ன நடக்கிறது என்று கொஞ்சமாவது ஹோம்ஒர்க் பண்ணியிருந்தால் இப்படியெல்லாம் ஒரு விவாதத்தை கொண்டுபோயிருக்க மாட்டார்கள்.
இளைஞர்களுக்கு எந்த நாடு, எந்த சமூகம் ஸ்டார்ட்அப் பிசினசை ஊக்குவிக்கிறதோ அந்த நாடும் தான் அந்த சமூகமும் தான் உயரும்.
இங்கே அரசாங்கங்கள் ஸ்டார்ட்அப்புகளுக்கு உதவுவதற்காக நிறைய திட்டங்கள் உள்ளன என்று சொல்கிறார்கள். உண்மை என்னவென்று என்னை போல தேடியவர்களுக்கு தான் தெரியும்.
ஒரு பக்கம் மிகப் பெரிய கார்பொரேட் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடிகளை வரி தள்ளுபடி செய்கிறார்கள். அந்த பணத்தில் பல லட்சம் ஸ்டார்ட்அப்புகளுக்கு நிதி உதவி செய்ய முடியும்.

Collateral தேவையில்லை என்று திட்டங்கள் உண்டு. அந்த திட்டங்களுக்கு கூட வங்கிகள் உங்களிடம் எவ்வளவு நிலம் இருக்கிறது, வீடு இருக்கிறது, சொத்து இருக்கிறது என்று கேட்கிறார்கள். சார் இந்த திட்டத்திற்கு collateral தேவையில்லை என்று சொன்னால், சொல்றவங்க சொல்வாங்க கடன் கொடுக்கிறது நாங்க தானே. நீங்க கடன கட்டமுடியுமா போய்ட்டா அரசாங்கத்திடம் இதை சொல்லி எங்களுக்கு அலைய முடியாதுங்க. கிளம்புங்க தம்பி
இஸ்ரேல், சிலி போன்ற குட்டி குட்டி நாடுகள் கூட ஸ்டார்ட்அப்புகளுக்காக அப்படி தீயாக வேலை செய்கிறார்கள். இன்றைய கர்நாடக அரசு இந்த விசயத்தில் சொல்லிகொள்ளும் வகையில் சிறப்பாக செய்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு கடந்த ஏழு ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை. இந்த பருவம் தான் ஸ்டார்ட்அப் உருவாகிக் கொண்டிருக்கும் பருவம். ஒரு பெரும் மாற்றத்தை தமிழ்நாடும் ஏன் ஒட்டுமொத்த இந்தியாவும் புறக்கணித்து கொண்டே வருகிறது. பல லட்சம் உள்நாட்டு தொழில்முனைவோர்கள் பயன்பெற்று கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் பெருகி இருக்க வேண்டிய அற்புதமான வாய்ப்பு.
இந்த சமயத்தில் இப்படி ஒரு டிவி விவாதம் எனும்போது எப்படி இருந்திருக்க வேண்டும். இந்த Ecosystemத்தின் அவசியத்தை, அவசரத்தை, தேவையை அலசி மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை, அரசாங்கத்தை தட்டி எழுப்ப வேண்டிய நேரத்தில் புதிய முயற்சிகளை எந்த உதவியுமில்லாமல் தம் கையூன்றி கடினமாக முன்னேறிக்கொண்டிருக்கும் இவர்களை குறை சொல்வதிலா உங்கள் நேரத்தை வீணடிப்பீர்கள கோபி?
நீயாநானா கோபி போல, ஆண்டனி போல எவ்வளவு தொலைநோக்கு சிந்தனையுள்ள அறிவாளிகளை கொண்டிருக்கிறோம் நாம். இந்த லட்சணத்தில் கோபிநாத் இளைஞர்களுக்கு ஊக்கமூட்டும் இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார். அது பெஸ்ட் செல்லிங் வேறு. தமிழ்சமூகம் செய்த பாவம் என்ன. அடேய் பசங்களா.. இன்னும் தமிழில் நல்ல Motivating books வரவே இல்லை. தமிழில் தான் படிப்பேன் என்று அடம்பிடித்தால் "திருக்குறளை" படியுங்கள். திருக்குறளை திரும்ப திரும்ப படியுங்கள். அல்லது பெரியாரை படியுங்கள்

கருத்துகள் இல்லை: