புதன், 13 செப்டம்பர், 2017

நீட் ரத்து: ஆர்ப்பாட்டம் ! விடுதலைச்சிறுத்தைகளுக்கு வேண்டுகோள்!

நீட் ரத்து: ஆர்ப்பாட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும்! விடுதலைச்சிறுத்தைகளுக்கு வேண்டுகோள்! நீட் என்னும் 'தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு' முறையை எதிர்த்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை (13-09-2017) ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. திமுக-வின் முன்முயற்சியால் ஒருங்கிணைக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்கவுள்ளன.

1.நீட் தேர்வுமுறையை ரத்து செய்ய வேண்டும்!
2.கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநிலப் பட்டியலில் இணைத்திடவேண்டும்!-என்கிற இரண்டு முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலும் அனிதாவின் உயிரிழப்புக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளின் போக்குகளைக் கண்டிக்கும் வகையிலும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச்சிறுத்தைகள் யாவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
# மத்திய அரசே, நீட் தேர்வை ரத்து செய்!
# மத்திய அரசே, கல்வி அதிகாரத்தை மாநிலப் பட்டியலில் இணைத்திடு!
# மத்திய அரசே, மாநில உரிமைகளைப் பறிக்காதே! மத்தியில் அதிகாரங்களைக் குவிக்காதே!
# மத்திய அரசே, கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியைக் கைவிடு!
இத்தகைய முழக்க அட்டைகளுடன் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவண்:
தொல். திருமாவளவன்
நிறுவனர்- தலைவர், விசிக.

கருத்துகள் இல்லை: