சனி, 16 செப்டம்பர், 2017

மிடாஸ் சாராயம் வாங்குவதை குறைத்த டாஸ்மாக் - சசிக்கு 600 கோடி இழப்பு ..

Mathi - Oneindia Tamil  : சென்னை: சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ்
ஆலையில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்வதை தமிழக அரசு வெகுவாக குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் மிடாஸ் ஆலைக்கு ரூ600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2002-ம் ஆண்டு சசிகலா குடும்பத்தினர் மிடாஸ் மதுபான ஆலையை தொடங்கினர். 2003-ம் ஆண்டு முதல் தமிழக அரசு மிடாஸில் கொள்முதலை தொடங்கியது. 2011-ம் ஆண்டில் மிடாஸின் ஆண்டு வருமானம் ரூ360 கோடியாக இருந்தது. தற்போதைய நிலையில் மிடாஸின் ஆண்டு வருமானம் ரூ1,200 கோடி என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: