புதன், 13 செப்டம்பர், 2017

எடப்பாடி அரசை காப்பாற்ற மத்திய அரசு முழு மூச்சில்.... தங்கமணி டெல்லி பயணம்


அதிமுக அம்மா அணி, புரட்சித்தலைவி அம்மா அணி இரு அணிகளும்
இணைந்து இன்று நடத்திய பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளரான சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தினகரன், முதல்வரை மாற்றுவோம். இல்லையென்றால் ஆட்சியை அகற்றுவோம் என அறிவிப்பு செய்திருந்தார். தொடர்ந்து திமுக தரப்பில், ’’எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சியில் நம்பிக்கை இல்லை. அவர் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரவேண்டும் ’’என தமிழக ஆளுநர் வித்தியாசாகரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதன்பேரில் எந்தநடவடிக்கையும் எடுக்காத சூழலில் திமுக செயல்தலைவர் இன்று உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் ஆளும் அரசான எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் போதிய பலம் இல்லை என்றும் சட்டவிதிகளை கூறி, ஏற்கனவே நாங்கள் தமிழக ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி மனு கொடுத்துள்ளோம். ஆனால் இன்றுவரை தமிழக ஆளுநர் அதன் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை.


ஆகவே, தமிழக சட்டமன்றத்தை கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த சூழலுக்கு இடையில்தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியைக்காப்பாற்ற டெல்லி பாஜக இறுதியாக தனது வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் முக்கிய பங்காற்றும் பொதுத்துறை அமைச்சர் தங்கமணி இன்று இரவு ரகசியமாக டெல்லி சென்றுள்ளார்.

அவர் நாளை காலையில் பாஜக டெல்லி மேலிட தலைவர்களோடு பொதுக்குழு தீர்மானங்களைப்பற்றி விரிவாக கூறிவிட்டு, நாளை காலை 9 மணிக்கே டெல்லியில் இருந்து நேரடியாக கோவை திரும்புகிறார். பாஜக மேலிடம் இந்த ஆட்சியை தக்க வைப்பதற்காக சட்ட ரீதியாக தாங்கள் க்ளீன் என்பதை சட்டத்திற்கு புறம்பாக தனது நிகழ்வுகளை அரங்கேற்றி வருகிறது. - ஜீவாதங்கவேல்  நக்கீரன்

கருத்துகள் இல்லை: