திங்கள், 11 செப்டம்பர், 2017

ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம்: தினகரன் பேட்டி

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம்: தினகரன் தடாலடி பேட்டி மதுரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரிடம் கடிதம் அளித்தனர். அவர் ஒரு எம்.எல்.ஏ. மனுவை வாபஸ் பெற்ற நிலையில், புதிதாக மூன்று எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்றும், ஆட்சி கவிழ்வதை விரும்பவில்லை என்றும் டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வந்தார்.


இந்த சூழ்நிலையில், கட்சியை முழுமையாகக் கைப்பற்றும் முயற்சியாக அ.தி.மு.க.வின் அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்து நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பொதுக்குழுவை கூட்டுவதற்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த ஆட்சி நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற முயற்சிப்போம். இல்லையேல் ஆட்சியை வீடடுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம்.

சசிகலாவால் பதவியில் அமர்த்தப்பட்டவர்கள் இப்போது பொதுமக்களை ஏமாற்றி ஆட்சியை தொடர்ந்து வருகின்றனர். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என பொதுமக்களே விரும்புகின்றனர். முதலமைச்சரை நீக்கிவிட்டு நல்ல முதல்வரை பதவியில் அமர வைபோபம். ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவி இல்லையென்றால் தூக்கம் வராது. இவ்வாறு அவர் கூறினார். டிடிவி தினகரனின் இந்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டால் ஆட்சி கவிழும்  மாலைமலர்

கருத்துகள் இல்லை: