ஞாயிறு, 13 நவம்பர், 2016

மம்தா பானர்ஜி: இந்தியா முழுவதும் சந்தைகள் சீரழிந்து விட்டது ... உடனடியாக ரூபாய் நோட்டு மாற்றத்தை ரத்து செய்யவும்!

ரூ.500, ரூ.1000 நடவடிக்கையினால் நாடு முழுதும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிய நிலையில் இந்த ‘கறுப்பு அரசியல் முடிவு’ வாபஸ் பெற வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் மம்தா பானர்ஜி இது குறித்து பதிவிட்டது: “இந்த கறுப்பு அரசியல் முடிவை வாபஸ் பெறவும், சாதாரண மக்கள் கடுமையாக அவதிப்படும் இந்த முடிவை உடனடியாக ரத்து செய்யுங்கள். இந்தியா நெடுக சந்தைகள் சீரழிந்துள்ளன. கொள்முதல் திறன் சரிவடைந்துள்ளது. பெரியோர், சிறியோர் என்று அனைவரும் இதனால் பாதிப்படைந்துள்ளனர் எனவே மீண்டுமொருமுறை நான் மத்திய அரசிடம் இத்திட்டத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைக்கிறேன். இது ஒரு பெரிய கறுப்பு மோசடியாக உருவெடுத்துள்ளது. சாதாரண மக்களுக்கு அல்லல், நிதிமுறைகேடு செய்பவர்களுக்குக் கொண்டாட்டமாகியுள்ளது. இந்த அரசியல் மற்றும் நிதி அராஜக நிலைக்கு எதிராக எதிர்க்கட்சிகளான நாம் ஒன்று திரண்டு போராட வேண்டும். ஏழை விரோத அரசுக்கு எதிராக நாம் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்திய மக்களை அவதிக்குள்ளாக்கி, ஏழைகளாக்கிவிட்டு ஜப்பான் சென்று விட்டார் நம் பிரதமர் மோடி” என்று சாடியுள்ளார்.  tamilthehindu.com

கருத்துகள் இல்லை: