திங்கள், 14 நவம்பர், 2016

பினாமி பெயரில் சொத்தா? தப்ப முடியாது என்கிறார் மோடி!

பனாஜி:''கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக் கைகளுக்காக மிரட்டப்படுகிறேன்; நாட்டின் நலனுக்காக உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். அடுத்ததாக, பினாமி பெயரில் சொத்து சேர்த்துள்ளவர்களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக கூறினார். கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை ஒடுக்குவதற்காக, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார். இந் நிலையில்,அடுத்த ஆண்டு சட்டசபை தேர் தலை சந்திக்கும் கோவாவில், நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் துவங்கியது, கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள். அரசின் இந்த முயற்சிக்கு, சிலர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.  மோடியே அம்பானி அதானிகளின் பினாமி என்பது முழு  உலகத்துக்கே தெரியும்   .பாஜக ஆர்எஸ்எஸ்ஸின் பினாமி ..மத்திய அரசு  இப்போ காப்பறேட்டுக்களின்  பினாமியாகி கொண்டிருக்கிறது? 


அது பற்றி நான் கவலை படவில்லை. என்னை எரித்துக் கொன்றாலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறை வேற்றுவதில் இருந்து பின்வாங்க மாட்டேன். நான் பதவிக்காக அலை பவன் அல்ல; நாட்டின் நலனுக்காக, என்னு டைய கிராமத்தை, குடும்பத்தை விட்டுவிட்டு வந்துள்ளேன்.

அது போலவே, நேர்மையான மக்கள், வங்கி களில் காத்திருந்தாலும், நாட்டுக்கு பலன் கிடைக்கிறது என்று மன திருப்தியுடன் கூறுகின் றனர்.தற்போது எடுத்துள்ள நடவடிக்கையால், மக்களுக்கு சில சிரமங்கள் இருக்கலாம். வெறும், 50 நாட்களுக்கு பொறுத்திருங்கள்;
அதன் பின், இந்தப் பிரச்னை முழுவதுமாக நீக்கப்பட்டு விடும்.

அந்த இலக்கை அடையும் வகையில், கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். அடுத்தது, பினாமிபெயரில் சொத்து சேர்த்துள்ளவர் கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.கடந்த, 70 ஆண்டு களாக, கொள்ளையடித்து வந்தவர்கள், தற்போது ஆத்திரமடைந்துள்ளனர்; அதனால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அவர்கள் என்னை உயிருடன் விடமாட்டர். நான் எதற்கும் தயாராக உள்ளேன்; என்னை எரித்துக் கொன்றாலும், கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்; தீவிரமாகும்.

தங்க நகை வாங்குபவர்களிடம் இருந்து, 'பான் கார்டு' எண்ணை பெற வேண்டும் என, தங்க நகைக் கடைகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதைத் திரும்பப் பெற வேண்டும் என, பல எம்.பி.,க்கள் என்னிடம் வலியுறுத்தினர்;

உடனடியாக எழுத்து மூலம் தர வேண்டும் என, சிலர் மிரட்டினர். அவர்களின் பெயர்களை வெளியிட்டால், இனி தொகுதி பக்கமே அவர்கள் போக முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை

கோவாவில் நடந்த நிகழ்ச்சியில் மோடி மேலும் பேசியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஆட்சியில் நிலக்கரி ஊழல்,'2ஜி' ஊழல் என அரசின் பணம் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கப்பட்டது.கடந்த 70 ஆண்டு களாக உள்ள இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இந்தியாவை ஊழலில்லாத நாடாக மாற்றுவதே என் இலக்கு.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் நடந்துள்ள ஊழல்களை வெளிப்படுத்துவோம்.இதற்கு, ஒரு லட்சம் இளைஞர்களை பணியில் அமர்த்த வேண்டு மானால் அதற்கும் தயாராக உள்ளோம், என்றார்.

பல்கலை தரம் உயர வேண்டும்

கர்நாடகா, பெலகாவியில் கர்நாடகா லிங்காயத்< கல்வி சொசைட்டியின் 100வது ஆண்டு விழா வில் மோடி பேசியதாவது:உலகளவில் உள்ள மிகச் சிறந்த 100 பல்கலைகள் பட்டியலில் ஒரு இந்தியப் பல்கலையும் இடம்பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

இதில் இடம்பெறும் வகையில் பல்கலைகளின் தரம் உயர வேண்டும். இதற்கான சிறப்பு நிதி உதவியை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது. தலா 10 அரசு மற்றும் தனி யார் பல்கலைகள் இந்த திட்டத்தில் இணைய வேண்டும், என்றார்.

துாக்கில் போடுங்கள்

நீங்கள் விரும்பிய இந்தியாவைத் தருவேன் என, உறுதியளித்தேன்; அதை நிறைவேற்றும் வகையில் தான் செயல்படுகிறேன். மக்கள் சந்திக்கும் சிரமங்களுக்காக வருத்தமடை கிறேன்; அதே நேரத்தில் நான் இதில் எந்தத் தவறும் செய்யவில்லை; அப்படி தவறு செய்த தாக கருதினால், நடுத் தெருவில், என்னை துாக்கிலிடுங்கள்.

நரேந்திர மோடி, பிரதமர் தினமலர்.com

கருத்துகள் இல்லை: