திங்கள், 14 நவம்பர், 2016

உயிரோடு எரிக்க திட்டமிட்டாலும் பயப்படமாட்டேன்-மோடி ஆவேசம்! (அட குஜராத்தில் இவர் செய்ததை எல்லாம் இவரே சொல்கிறார்)


இன்று, வடக்கு கோவாவில் க்ரீன்பீல்ட் விமான நிலையம் மற்றும் டியூம் எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் மோடி, “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஊழலுக்கு எதிராகவே வாக்களித்தனர். கறுப்புப்பணத்தை ஒழிக்கவே எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த அரசு எடுத்துள்ள கறுப்புப்பண நடவடிக்கையால் பலர் தூக்கத்தை தொலைத்து விட்டனர். 7௦ ஆண்டு கால நோய்க்கு 17 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக என்னை உயிரோடு எரிக்க திட்டமிட்டாலும் எடுத்த காரியத்தை முடிக்காமல் ஓய மாட்டேன்.

பினாமி சொத்து வைத்திருப்பவர்களுக்கு தண்டனை உறுதி. எனது இந்த முடிவு வெற்றியைக் கொடுக்கும். இந்த வெற்றி நாட்டு மக்களைச் சார்ந்தது. டிசம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு இந்த முடிவு தவறு என்று நிரூபணமானால் என்னை முச்சந்தியில் நிறுத்தி கேள்வி கேளுங்கள். 2ஜி நிலக்கரி ஊழலில் தொடர்பு உடையவர்கள் எல்லாம் இன்று ரூபாய் 4000 பணத்துக்கு வரிசையில் நிற்கின்றனர்” என்று ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கி பேசிய அவர், “அதேசமயத்தில் நேர்மையாக வாழ்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. நாட்டு மக்களின் சிரமத்தை உணர்கிறேன். இது வெறும் 50 நாட்களுக்கு மட்டுமே. மேலும் கடல் தாண்டிச்சென்ற பணத்தை மீட்பதே இந்த அரசின் நோக்கம்” என்றும் கூறினார். விழாவை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்படும் மோடி, புனேவில் நடக்கும் மற்றொரு பொதுக்கூட்டத்திலும் இன்று கலந்து கொண்டு பேசுகிறார்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: