செவ்வாய், 8 நவம்பர், 2016

எமர்ஜென்சியை மிஞ்சிய சர்வதிகார ஆட்சி..

சென்னை: 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது
என்ற பிரதமரின் அறிவிப்புக்கு மக்களிடையே கடும் கொந்தளிப்பும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
கள்ள நோட்டுக்களை ஒழிக்க இது உதவும் என்றாலும் கூட நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களைத்தான் இது பெருமளவில் பாதிக்கும் என்ற கருத்து மக்களிடையே எழுந்துள்ளது.
மோடியின் அறிவிப்பால் மக்கள் பல்வேறு வகையான சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வரத் தொடங்கியுள்ளன.
1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பால் மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர். இது தேவையில்லாத வேலை என்பதே பலரின் கருத்து   முகநூல் பதிவு சுமி பி :" நடுராத்திரி 12 மணியில் இருந்து நாட்டு மக்கள் அனைவர் கையிலும் புழங்கும் 500, 1000 செல்லாது என ராத்திரி 8 மணிக்கு அறிவிக்கும் பைத்தியக்கார நாடு உலகில் வேறெங்காவது உண்டா மக்களே...


எமர்ஜென்ஸியை மிஞ்சிய சர்வாதிகாரம்

பலரும் எமர்ஜென்ஸியை விட மோசமான சர்வாதிகாரம் இந்த அறிவிப்பு என்று விமர்சிக்கின்றனர். பணக்காரர்களை விட சாதாரண மக்களையே இது கடுமையாக பாதிக்கும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

பணம் இருப்பு வைத்திருப்போர் பெரும் பாடு

சொத்துக்களைப் பறிமுதல் செய்வாரா மோடி பெரும்பாலான வீடுகளில் குறிப்பாக முதியோர்கள் தங்களது மருத்துவம் உள்ளிட்ட அவசர செலவுகளுக்காக சில ஆயிரம் வரை வைத்திருப்பார்கள். இப்போது இதை மாற்ற அவர்கள் வங்கிகளுக்கு அலைய வேண்டியிருக்கும். அவர்களுக்கு தேவையில்லாத மன உளைச்சலையே இது தரும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சொத்துக்களைப் பறிமுதல் செய்வாரா மோடி

அப்பாவி மக்களைப் பாதிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், கோடீஸ்வரர்கள், நிறுவன அதிபர்கள் குவித்து வைத்திருக்கும் சொத்துக்களையும் மீட்பாரா என்று பலர் கேட்டுள்ளனர்.

ரூ. 100 கள்ள நோட்டு பெருகாதா அப்ப எதுக்கு 2000 நோட்டு

1000 ரூபாய் நோட்டை ஒழிக்கும் நடவடிக்கை சரி. பிறகு எதற்காக ரூ. 2000 நோட்டு. இது முரண்பாடாக இருக்கிறதே என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ரூ. 100 கள்ள நோட்டு பெருகாதா

கள்ள நோட்டுக்காரர்களுக்கு இனி வேலை வேறு மாதிரியாக இருக்கும். அதாவது இனிமேல் ரூ. 100க்குதான் அதிக மரியாதை இருக்கும். எனவே அந்த நோட்டை இனி அதிக அளவில் அவர்கள் அடிப்பார்கள் என்றும் பலர் கவலை தெரிவித்துள்ளனர்  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: