ஞாயிறு, 20 நவம்பர், 2016

உபி ரயில் விபத்து உயிரிழப்பு 45 ஆக உயர்ந்தது.. 14 பேட்டிகள் தடம் புரண்டது

பாட்னா: உத்தரபிரதேச மாநிலம் கான்பூர், புகாரியன் அருகே, பாட்னா-இந்துார் விரைவு ரயில் இன்று (20-11-16) அதிகாலை 3 மணிக்கு தடம் புரண்டதில் உயிரிழப்பு 45 ஆக உயர்ந்தது. மேலும் பலர் காயமடைந்தனர். தடம் புரண்ட 14 பெட்டிகள் 14 பெட்டிகள் தடம் புடண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்தமாநில அரசு மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவ்வழியாக வரும் மற்ற ரயில்கள் வேறு தடஙகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. அகிலேஷ் உத்தரவு: தகவல் அறிந்த மாநில முதல்வர் அகிலேஷ், மீட்பு பணிகளை உடனே மேற்கொள்ளுமாறு டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.

ராஜ்நாத் சிங் இரங்கல்: ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ரயில்வே அமைச்சர் கருத்து : இவ்விபத்து குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து நிலைமை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
பாட்னா: உத்தரபிரதேச மாநிலம் கான்பூர், புகாரியன் அருகே, பாட்னா-இந்துார் விரைவு ரயில் இன்று (20-11-16) அதிகாலை 3 மணிக்கு தடம் புரண்டதில் உயிரிழப்பு 45 ஆக உயர்ந்தது. மேலும் பலர் காயமடைந்தனர். தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: