சனி, 26 நவம்பர், 2016

குரங்கை சித்திரவதை செய்து கொன்ற நான்கு மருத்துவ மாணவர்களும் கைது!

வேலுார்: குரங்கை கொடூரமாக கொன்ற, மருத்துவ மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, வனத்துறை முடிவு செய்துள்ளது. வேலுார், பாகாயத்தில், சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி உள்ளது. விடுதியில் தங்கி, படித்து வரும் நான்கு மாணவர்கள், 19ம் தேதி, ஒரு பெண் குரங்கை பிடித்து, சித்ரவதை செய்து கொன்று, குழி தோண்டி புதைத்தனர். பிராணிகள் வதை தடுப்பு சங்க தலைவர் சுவான் கிருஷ்ணன் புகாரை அடுத்து, நான்கு மாணவர்கள் மீதும் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவர்களை, கல்லுாரி நிர்வாகம், 'சஸ்பெண்ட்' செய்தது.'வன விலங்குகள் பட்டியலில் குரங்கு வருவதால், இந்த வழக்கை, வனத்துறையினர் தான் விசாரிக்க வேண்டும்' என, சமூகநல ஆர்வலர் வரதராஜன், கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து, வேலுார் எஸ்.பி., பகலவன் மற்றும் பாகாயம் போலீசாருக்கு, மாவட்ட வனத்துறையினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், 'வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சம்பவம் நடந்துள்ளதால், வனத்துறை தான் நேரடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். எனவே, இந்த வழக்கை வனத்துறைக்கு மாற்ற வேண்டும்' என, குறிப்பிட்டு உள்ளனர்.

'இந்த வழக்கை போலீசார், வனத்துறைக்கு மாற்றினால், வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி, நான்கு மாணவர்களும் உடனடியாக கைது செய்யப்படுவர்' என, வனத்துறையினர் கூறினர்.தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: