செவ்வாய், 22 நவம்பர், 2016

கிராம கூட்டுறவு வங்கிகளை ஒழித்துவிட்டு பிக் பஜார் ,ரிலையன்ஸ் போன்றவற்றுக்கு பொருளாதாரம் தாரை வார்ப்பு !

big-bazaar-stores16052015ரூ. 500. ரூ. 1000 நோட்டுகள் தடை அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் விதமாக, மத்திய அரசு பெட்ரோல் பங்குகளில் செல்லாத நோட்டுக்களுக்கு சில்லறை பெறலாம என அறிவித்திருந்தது. இந்நிலையில் பிக் பஜார் என்ற தனியார் ரீ டெயில் நிறுவனம் மூலமாக டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 பெறலாம் என பிக் பஜாரின் நிறுவனர் கிஷோர் பியானி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். நாளை மறுநாள் முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப் புற பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றும் கூட்டுறவு வங்கிகளை ஒழித்துவிட்டு பிக் பஜார், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களை வளர்த்துவிடுவதாக கண்டனம் எழுந்துள்ளது.

பிக் பஜாரின் நிறுவனத்தின் ரீ டெயில் கடைகளில் நாளை மறு நாள் முதல் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி,
“இங்கே என்ன நடக்கிறது? இந்த தனியார் நிறுவனத்துக்கு வங்கிக்கான அனுமதியை ரிசர்வ் வங்கி அளித்திருக்கிறதா? ஏன் இந்த தனியார் நிறுவனம் மட்டும்?” என கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், இங்கே பணத்தை விநியோகிப்பது மட்டும் பிரச்னை இல்லை.  போதுமான அளவு பணத்தை வங்கிகளுக்கு மோடி அரசு அளிக்கவில்லை என்பதே பிரச்னை என்றும்
தனியார் நிறுவனங்களுக்கு பணத்தை அளிப்பதற்குப் பதிலாக, மோடி அரசு வங்கிகளுக்கு குறிப்பாக கிராமப்புற வங்கிகளுக்கு போதிய பணத்தை அளிக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். thetimestamil.com

கருத்துகள் இல்லை: