வியாழன், 24 நவம்பர், 2016

500, 1,000 ரூபாய் நோட்டு ஒழிப்பு 93 % பேர் ஆதரவு: மோடி பெருமிதம்

டெல்லி: 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு 93 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார். மேலும், கறுப்புப் பணம் தொடர்பாக 10 கேள்விகளையும் முன் வைத்தார். அதில் பொதுமக்கள் பதில் அளிக்கும்படியும் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பகுதிகளிலிருந்து சுமார் 5 லட்சம் பேர் கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு 93 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் 4 நட்சத்திர ரேட்டிங்கிற்கு மேலாக ஓட்டளித்துள்ளனர் என்றும் 73 சதவீதம் பேர் மிக புத்திசாலிதனமானது என்று 5 நட்சத்திர ரேட்டிங்கிற்கு வாக்களித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ள அவர், மத்திய அரசின் நடவடிக்கை மிக சிறப்பானது என்று பாராட்டி 73 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு சதவிகித மக்களே மத்திய அரசின் நடவடிக்கை மிக மோசமானது என கருத்து தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான ஒட்டு மொத்த அரசின் நடவடிக்கைக்கு மிக நன்று என 92 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். ஊழல், பயங்கரவாத நிதியுதவி, கருப்பு பணம் ஆகியவற்றிற்கு ஆதரவாகவும், அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராகவும் சிலர் செயல்பட்டு வருவது உண்மை என்று 86 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: