புதன், 23 நவம்பர், 2016

பிரதமர் பாராளுமன்றத்துக்கு வருவரை சபையை நடக்க விடமாட்டோம் ! ஓடி ஒழியும் பிரதமர் மோடி?

'செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து, விவாதம் நடக்கும்போது, சபைக்கு பிரதமர் வந்தே ஆக வேண்டும். இல்லையேல், எத்தனை நாட்களானாலும் சபையை நடத்த அனுமதிக்க மாட்டோம்' என, எதிர்க்கட்சிகள் கோபாவேசம் காட்டியதால், பார்லிமென்ட் நேற்றும் முடங்கியது. பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் துவங்கி, ஏற்கனவே நான்கு நாட்களும் அமளியால் முடங்கிவிட்ட நிலையில், ஐந்தாவது நாளான நேற்றும், இரண்டு சபைகளிலும் பெரும் ரகளை நிகழ்ந்தது. ராஜ்யசபா துவங்கியதுமே, இந்த பிரச்னை குறித்து பேச, எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுந் தனர். அப்போது குறுக்கிட்ட துணைத் தலைவர் குரியன், ''பிரதமரை, சபைக்கு வரும்படி, வலியுறுத்த முடியாது,'' என்றார்.  பிரதமர் ஏன் அவையில் பேசாமல் பொது கூட்டத்தில் பேசுகிறார். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்றா?



இதை, மாயாவதியும், சரத் யாதவும் ஏற்காமல், துணைத் தலைவருடன் வாக்குவாதம் செய்த னர். 'நாடு முழுவதும், அசாதாரண சூழ்நிலை உள்ளது. பதிலளிக்கும் கடமை, பிரதமருக்கு உண்டா இல்லையா' என, அவர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த, அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ''விவாதம் நடத்தலாம்; அனைத்து விபரங்களையும் விவாதத்தின்போது பேசுங்கள்,'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட குலாம்நபி ஆசாத், ''விவாதம் நடத்த, நாங்களும் தயார்; ஆனால்,
பிரதமர் வந்தால் தான், விவாதம் நடத்த வேண்டும்,'' என்றார். இதற்கு, பா.ஜ., - எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கவே, சபையில் ரகளை துவங்கி யது. இருதரப்பும்,கடுமையாக கோஷங்கள் போடவே, துணைத் தலைவர் குரியன் கடும் கோப மடைந்து, ''எதிர்க்கட்சியினர் தான் கூச்சலிடுகின்ற னர் என்றால், நீங்களும் அமளியில் இறங்குவதா,'' என்றார்.

இதன்பின், சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடிய போது, கேள்வி நேரம் துவங்கியது; அப்போதும், ரகளை ஏற்பட்டு, இரண்டு முறை ஒத்தி வைக்கப் பட்டது.மதியம் சபை துவங்கியதும், ரூபாய் நோட்டு விவாதத்தை எடுத்து கொள்வதாக கூறி, ஏற்கனவே நின்று போனவிவாதத்தின் தொடர்ச்சியாக, பேச வேண்டிய மீதமுள்ள எம்.பி.,க்களை குரியன் அழைத்தார்; யாரும், பேச முன்வரவில்லை.

'பிரதமர் சபைக்கு வந்து விளக்கம் அளித்தால் தான், சபையை நடத்த விடுவோம்' என, கோஷமிட்டனர். அதற்கு, ''என்னால், பிரதமரை சபைக்கு அழைக்க முடியாது,'' என குரியன் கூற, அமளி ஏற்பட்டது; இதையடுத்து, நாள் முழுவதும் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

தேர்தல் வெற்றி

லோக்சபாவிலும், காலை முதலே அமளி காணப் பட்டது. காங்கிரஸ், திரிணமுல், இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி கள் அனைத்தும் திரண்டன. ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்றால் மட்டும் போதாது; பிரதமர் சபைக்கு வர வேண்டும்' என, எதிர்க்கட்சிகள்
வலியுறுத்தின.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டிய பார்லி.,விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார், ''பிரதமரின் அறிவிப்பை, மக்கள் ஏற்றுள்ளனர். அதனால் தான், பா.ஜ.,வுக்கு வெற்றியை தந்துள்ள னர்,'' என்றார். அமளி அதிகமானதால், லோக்சபா, அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.இதுவரையில் மற்ற எதிர்க்கட்சிகளுடன் ஒட்டாமல்
தனித்து நின்ற, அ.தி.மு.க.,நேற்று, முதன் முறையாக, ரூபாய் நோட்டு விவகாரத்தில், சற்று ஆர்வம் காட்டியது.

லோக் சபாவில், அ.தி.மு.க.,பார்லிமென்ட் குழு தலைவர் வேணுகோபால், ''ரூபாய் நோட்டு விவ காரத்தில், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள னர்; எனவே, ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி தர வேண்டும்,'' என கேட்ட போது, எதிர்க்கட்சிகள் உற்சாகமாகின.

'அ.தி.மு.க.,வும் எங்களுடன் இணைந்துள்ளது' என, பலரும் கூறினர். இதனால், இன்று நடக்க வுள்ள எதிர்க்கட்சிகளின் தர்ணா போராட்டத் தில், அ.தி.மு.க., பங்கேற்குமா என்ற
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


தொடர் போராட்டம்

செல்லாத நோட்டுகள் விவகாரத்தில் மத்திய அரசை, பல்வேறு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இந்நிலையில், காங்கிரஸ் தலைமை யில், 10 எதிர்க்கட்சிகள் இணைந்து, மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்துள்ளன.

காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, இந்த திடீர் கூட்டணியை அமைத்துள்ளன.

இந்தக் கட்சித் தலைவர்களின் கூட்டம், டில்லி யில் நேற்று காலை நடந்தது. அதன்பின், காங்கி ரஸ் எம்.பி., ஜோதிராதித்யா சிந்தியா கூறியதாவது:

நாளை (இன்று) பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிடவும் திட்டமிட்டுள்ளோம்.

இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். தெருமுனை பிரசாரங்கள் உள்ளிட்ட தொடர் போராட்டங் களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் தினமலர்,காம்

கருத்துகள் இல்லை: