வியாழன், 24 நவம்பர், 2016

செல்லாத நோட்டு அறிவிப்பை எதிர்த்து இன்று திமுக மனித சங்கிலி போராட்டம்

திமுக மனிதச்சங்கிலிசென்னை: பிரதமர் மோடி, கடந்த 8ஆம் தேதி ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக, ரூபாய் நோட்டு பிரச்னையால் பொதுமக்கள் நாள்தோறும் பலவித துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். இன்றுடன் வங்கிகளை பணத்தை மாற்றுவதற்கான காலக்கெடு முடிகிறது. இனி வங்கிகளில் டெபாசிட் மட்டுமே செய்ய முடியும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும், ஒரு சாரார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக எதிர்கட்சியான திமுக-வும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது."
தமிழகத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததால் ஏற்பட்டுள்ள இன்னல்களை நீக்க, உடனடியாக மத்திய அரசு " உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரி, திமுக சார்பில் இன்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.
மாலை 4 மணி முதல் 5 மணி வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த போராட்டத்தில் திமுக-வினர், வணிகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது."தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், திமுக மாவட்டச் செயலாளர்களின் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறுவதாக திமுக தலைவர் கருணாநிதியும்  தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினும் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

கலைஞர் கருணாநிதி பங்கேற்கமாட்டார்
ஒவ்வாமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கும் கருணாநிதி, மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க மாட்டார். சென்னையில் நடைபெறும் மனிதச்சங்கிலி போராட்டத்தில் திமுக பொருளாளரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பார்வையிடுவார் என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன tamiloneindia.com

கருத்துகள் இல்லை: