புதன், 13 ஜூலை, 2016

முன்னாள் சிபி ஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீதி சுரங்க ஒதுக்கீடு ஊழல்....

புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவுக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் குற்றம் சாட்டப்பட்டோரை, அப்போது, சி.பி.ஐ., இயக்குனராக இருந்த ரஞ்சித் சின்ஹா சந்தித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, < சி.பி.ஐ., விசாரணைகளில் பாதிப்பு ஏற்பட்டதா என்பதை கண்டறிய, சி.பி.ஐ., முன்னாள் சிறப்பு இயக்குனர் எம்.எல்.சர்மா தலைமையில், விசாரணைக்குழுவை, சுப்ரீம் கோர்ட்அமைத்தது. இந்நிலையில், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மதன் லோகுர், குரியன் ஜோசப், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று ஆஜராகி கூறியதாவது: எம்.எல்.சர்மா தலைமையிலான விசாரணைக்குழு, சீலிட்ட உறையில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் ரஞ்சித்சின்ஹாவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது

. நிலக்கரி ஊழல் வழக்குகளை, சி.பி.ஐ., விசாரணை அதிகாரிகள் முடித்துக் கொள்ள வேண்டுமென்ற, தன் முடிவை, ரஞ்சித் சின்ஹா மாற்றிக் கொள்ளவில்லை என, விசாரணையில் தெரிய வந்துள்ளது. சின்ஹாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வருகைப் பதிவேட்டில், ஊழலில் தொடர்புடைய பலர், வீட்டுக்கு வந்ததாகபதிவுகள் உள்ளன. அவை அனைத்தும் உண்மையான தகவல்களே. இவ்வாறு முகுல் ரோஹத்கி கூறினார். இதையடுத்து, தகுந்த உத்தரவுகளை விரைவில் பிறப்பிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: