வெள்ளி, 20 மே, 2016

சிறுதாவூரில் தொடங்கிய கண்டெய்னர் சர்ச்சை திருப்பூரில் சிக்கி, டெல்லி வரை விவகாரமாகியுள்ளது.

vikatan.com அந்த நாள் மே 13. மணி நள்ளிரவு 12:20. கண்டெய்னர் லாரிகள். கோவையில் இருந்து கிளம்பிய அந்த லாரிகளுக்கு முன்னால் ஒரு இன்னோவா கார். அதேபோல அந்த லாரிகளுக்குப் பின்னால் இரண்டு இன்னோவா கார்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.அந்த லாரிகள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர்-குன்னத்தூர் பைபாஸ் சாலையில் படுவேகமாய் செல்கின்றன. அங்கே தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழு அலுவலர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் அந்த இன்னோவா காரை பரிசோதிக்க... தடுத்துப் பார்த்தனர். ஆனால் அவர்களின் தடுப்பை மதிக்காமல் கார் விரைந்து செல்ல... கண்டெய்னர் லாரிகளும், பின்னால் வந்த இரண்டு இன்னோவா கார்களும் அதேபோல்  பறக்கின்றன.

உடனே தேர்தல் அதிகாரிகள் டீம் கார்களில் ஏறி  விரட்டி,  ஐந்து கிலோ மீட்டர் தாண்டி உள்ள செங்கப்பள்ளி அருகே அந்த லாரிகளை மடக்கிப் பிடித்தனர். அப்போது முன்னால் போன, பின்னால் தொடர்ந்த  இன்னோவா கார்களில் இருந்து  டி-சர்ட் சகிதமாய்  இறங்கிவந்த 15 பேர்களும்... ""எதுக்கு லாரிகளை மறிக்கறீங்க? நாங்க எல்லாம் போலீஸ்'' என அவர்கள் பேச... ""உங்களைப் பார்த்தா போலீஸ் மாதிரி தெரியலையே''னு சொல்லிக்கிட்டே மூன்று லாரி டிரைவர்களை இறங்கச் சொல்லி, ""லாரிக்குள்ள என்ன இருக்கு..? எங்க கொண்டு போறீங்க?'' என கேள்விகளை அடுக்கினர் அதிகாரிகள்.இரண்டு டிரைவர்களில் ஒருவர் ""கேரளாவுக்குப் போயிட்டிருக்கிறேன்'' என இந்தியில் பதட்டமாய் சொல்லியவரிடம், ""இப்படி எப்படி கேரளாக்கு போவே..? திரும்பித்தானேப் போகணும்...'' என அவர்கள் மடக்க... பேந்தப் பேந்த விழித்திருக்கிறார் அவர்.  ஏனென்றால் லாரிகள் போன வழி.... சேலம் பைபாஸ் வழி. அதாவது பெருந்துறை, தருமபுரி, கிருஷ்ணகிரி என மேற்கு மண்டலத்தை கடந்து போகிற வழி.

;உடனே இன்னொரு டிரைவரிடம், ""லாரிக்குள்ள என்ன இருக்கு...?'' என போலீஸ் டீம் அதட்டலாய் கேட்க... ""உள்ளுக்குள்ள எல்லாம் பணம்தான் சார்...'' என அவரும் இந்தியில்  சொல்லியிருக்கிறார்  மிரண்டபடியே. உடனே லாரிகளைத் திறக்கச் சொல்லி பார்த்தவர்கள் அசந்துவிட்டார்கள். உள்ளே பெட்டிகளுக்குள் கட்டுக் கட்டாய் பணம்
டுக்கப்பட்டிருந்திருக்கிறது.இதுபற்றி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூரிடம் தகவல் தெரிவிக்க... லாரிகளும், போலீஸ் என்றவர்களும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப் பட்ட னர்.மாவட்ட  கலெக்டர் ஜெயந்தியும் அங்கே வர, மீடியாக்களுக்கு இந்த விஷயம் தெரிந்து குழுமிவிட்டனர். லாரிகளில் உள்ள பணத்தின் மதிப்பு 570 கோடி ரூபாய் என தெரிய வந்ததும் மலைப்பு அதிகமானது.இவ்வளவு பணம் ஏது?' என்ற கேள்வியைக் கேட்டபோது, ""அது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பணம். நாங்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு  கொண்டு போறோம்'' என்று தன்னை வங்கி ஊழியர் எனச் சொல்லிக்கொண்ட ரெட்டி என்பவர், ஒரு பேப்பரைக் காட்டியிருக்கின்றார்."இந்த ஒரு பேப்பர்  இவ்வளவு பணத்துக்கு கணக்கு காட்டவில்லையே..? அது மட்டுமில்லை ... உங்க லாரியில இருக்கிற பதிவு எண் ஆட 13 ஐ 8650-னு இருக்கு. ஆனா பேப்பர்ல அப்படி இல்லையே? தேதிகூட 13-5-16ன்னு தானே இருக்கணும்... ஆனா 13-6-16ன்னு இருக்கே?னு'' தேர்தல் அதிகாரிகள் கேட்க... என்ன சொல்வதென்று தெரியாமல் ""ஸ்பெல்லிங் மிஸ்டேக்  ஆயிருச்சு. அதற்குரிய டாகு மெண்ட்ஸ் அனைத்தும் எங்க ஹெட்ஆபீசுல இருக்கு. கொண்டுவரச் சொல்கிறேன்'' என்று ஏதேதோ சொல்லியிருக்கிறார் ரெட்டி. >மீடியாக்கள் சூழ ஆரம்பித்தவுடன் திருப்பூர் மக்களுக்கு தீ பிடித்துக்கொண்டது. ""அப்பா... 570 கோடியா?'' என ஆளாளுக்கு அவ்வளவு பணம் ஓட்டுக்கா இருக்கறதைப் பார்த்தே ஆகோணும்...'' என கலெக்டர் அலுவலகத்தை நெருங்க... துணை ராணுவப் படையினரால் அவர்கள் துரத்தப்பட்டனர்.மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான  ஜெயந்தியோ "".பிடிபட்ட  பணம் 570 கோடி வங்கிப்பணம் என சொல்லப்படுகிறது. ஆனால் அதற்குரிய ரெகார்ட்ஸ் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. அதனால் இது வங்கிப் பணம்தானா? என்பதை அறிய பேங்க் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், வருமானவரித்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஓன்று அமைக்கப்பட்டிருக்கிறது . விசாரித்து அவர்கள் கொடுக்கும் ரிப்போர்ட்டுக்குப் பின்னரே திரும்ப பணத்தை ஒப்படைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரைக்கும் அப்பணத்திற்கு துணை ராணுவமும், போலீசாரும் பாதுகாப்புக்கு நிற்பார்கள்'' என்றார் மீடியாக்களிடையே."இந்தப் பணம் ஏது? எங்கிருந்து வந்தது? எங்கே கொண்டு போனார்கள் ..? ஒரு ஏ.டி.எம் செண்டருக்கு ஒரு லட்ச  ரூபாய் கொண்டு போகும்போதே அதற்குரிய ஆவணம், போலீஸ் பந்தோபஸ்து இருக்கும்போது இவ்வளவு பணத்திற்கு ஏன் எந்த ரெக்கார்ட்சும் இல்லை...?' என நமக்கு தெரிந்த விசாரணை அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். இது முழுக்க... முழுக்க இந்த மேற்குமண்டலம் முழுக்க எலெக் ஷனுக்காக இறைக்க ஆளும் கட்சி கொடுத்த பணம் தான்.  லாரிகளுக்கு எஸ்கார்டாய் வந்தது எங்க போலீஸ் ஆட்கள்தான். போலீஸ் துணையோடு கொண்டுபோயிருக்கிறார்கள்'' என்றார்.

""கோடிக்கணக்கான ரூபாய் பணக்கட்டுகளுடன் கண்டெய்னர் பிடிபட்ட தகவல் டெல்லியை அடைந்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ந்துபோயினர். இது யாருடைய பணம் என விசாரிக்கும் பொறுப்பு இந்திய புலனாய்வுத் துறையான ஐ.பி.யிடம், இந்திய தேர்தல் ஆணையம் ஒப்படைத்தது. சனிக் கிழமை காலை வங்கி அதிகாரிகளை தொடர்புகொண்ட ஐ.பி.க்கு முதலில் சரியான பதில் கிடைக்கவில்லை. சனிக்கிழமை இரவு 8 மணியளவில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரிகள், ""அந்தப் பணம் எங்களுக்குச் சொந்தமானதுதான்'' என ஐ.பி.க்கும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தெரிவித்தார்கள்'' என்கிறார்கள் டெல்லியில் உள்ள அதிகாரிகள்.இதுபற்றி ரிசர்வ் வங்கி வட்டாரத்தில் விசாரித்தபோது... ""தமிழகத்தில் பணத்தை சேமித்து வைக்க "கரன்ஸி செஸ்ட்' எனப்படும் சேமிப்பு மையங்கள் 280 இருக் கின்றன. ஒரு மையத்தில் ஆயிரம் கோடி ரூபாய் கூட சேமித்து வைக்க முடியும். ஒரு கரன்ஸி செஸ்ட்டிலிருந்து மற்றொரு கரன்சி செஸ்ட்டிற்கு எப்படி பணம் எடுத்துச் செல்லவேண்டும் என ரிசர்வ் வங்கி விதிமுறைகளை வகுத்துள்ளது. அவற்றைக் கடுமையாகப் பின்பற்றாமல் கரன்சிகளை எடுத்துச் செல்ல முடியாது. அதை ரிசர்வ் வங்கி அனுமதிக்காது'' என்கிறார்கள்."ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி ஒருகோடி ரூபாய் கொண்டு சென்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பாதுகாப்போடு, ஐந்து கோடி ரூபாய் கொண்டுசென்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பாதுகாப்போடும் செல்ல வேண்டும் என தெளிவான விதிமுறைகள் வகுக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகின்றன'' என்கிறார்கள் ரிசர்வ் வங்கி அதிகாரிகள்.""சீல் வைக்கப்படாத கண்டெய்னர்கள், சாதாரண பூட்டுகள், யூனிஃபார்ம் போடாத போலீஸ் இவையெல்லாம் ஜெ.வுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவிற்குப் பணம் கொண்டு சென்ற கண்டெய்னர்களை நினைவுக்கு கொண்டு வருகிறது'' என்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள். "ஜெ.வின் சிறுதாவூர் பங்களாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 16 கண்டெய்னர்களில் கட்டுக் கட்டாகப் பணம் இருக்கிறது' என வைகோ சொன்னபோது, குறைந்தபட்சம் ஒரு சிறிய விசாரணை கூட நடத்தாமல், "அப்படி எதுவும் இல்லை' என மறுப்பு சொன்னார் தமிழக தேர்தல் ஆணையர் லக்கானி. வைகோ பொய் குற்றச்சாட்டு கூறுகிறார் என அ.தி.மு.க. வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனின் புகாரின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தார்கள். அந்தக் கண்டெய்னர்களில் மூன்றுதான் தற்பொழுது திருப்பூரில் சிக்கியிருக்கிறது'' என்கிறார்கள் ம.தி.மு.க.வைச் சேர்ந் தவர்கள்.
""இந்தக் குற்றச்சாட்டை முழுமை யாக நிராகரிக்க முடியாது. அது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் பணம் என்றால், அந்த லாரிகள் பிடிபட்டவுடன் வங்கி அதிகாரிகள் விரைந்து ஓடி வந்திருப்பார்கள். அடுத்த சிலமணி நேரங்களில் அந்தப் பணம் எங்களது பணம்தான்  என நிரூபித்திருப்பார்கள். பிடிபட்ட கண்டெய் னர்களில் இருந்த பணம் எங்களுடையது என அறிவிப்பதற்கே 18 மணிநேரம் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதால் இடையில் ஏதோ நடந்திருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது'' என்கிறார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத் தலைவர் கிருஷ்ணன்.இதுபற்றி நம்மிடம் பேசிய இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் சமீர்கோஷ், ""தமி ழகத்தில் தேர்தல் நேரத்தில்  ஓட்டுக்காக ஆளும்கட்சி பண வினியோகத்தில் ஈடு படுகிறது என குற்றச் சாட்டுகள் எழும் நேரத்தில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பணம் பிடிபடுகிறது என் றால் அது மிகமிக சீரிய ஸான விஷயம். அந்தப் பணம் எங்களுடைய கோவை மாவட்ட கருவூலத்திலிருந்து ஆந்திர மாநிலம் ஹைதராபாத் கருவூலத்திற்கு கொண்டு செல்கிறோம் என ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, 18 மணி நேரம் கழித்து அறிவிக்கிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலகட்டத்தில் 18  மணி நேர தாமதம் ஏன் என்கிற கேள்வி எழுகிறது. >அவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால் அதை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மண்டல அதிகாரிகளே உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித் திருக்கலாமே? அவர்களைத் தடுத்தது எது? என்கிற கேள்வி எழுகிறது. அவர்களது கருத்துப்படி இது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் பணம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்படுகிறது. இதற்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி அந்தப் பணம் வழியில் கொள்ளை போனால் ஏற்படும் இழப்பீட்டைத் தடுக்க இன்ஷுர் செய்திருக்க வேண்டும். அந்தப் பணத்தை இன்ஷுரன்ஸ் செய்யும் நிறுவனம், அந்தப் பணத்திற்கு உரிய பாதுகாப்பை அளிக்க தமிழக போலீஸாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.">இதையெல்லாம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதிகாரிகள் செய்தார்களா? என்பதற்கு எந்தப் பதிலுமில்லை. அப்படி அவர்கள் செய்திருந்தால்,  சகல பாதுகாப்போடு வரும் வங்கியின் பணத்தைக் கைப்பற்றி தமிழக காவல்துறையினர் சிறைப் பிடிப்பார்களா? இதையெல் லாம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா விளக்க வேண்டும். இல்லையென்றால் அரசியல் வாதியின் ஊழல் பணத்தை இந்திய அரசுக்கு சொந்தமான வங்கி காப்பாற்றுகிறது என்கிற குற்றச்சாட்டு உறுதியாகும்'' என்கிறார் விரிவாக.>நாம் இது குறித்து சென்னை மற்றும் ஹைதராபாத்திலுள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டோம். யாரும் உரிய பதிலைச் சொல்லவில்லை. >இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு  இந்தப் பண விவகாரம் தொடர்பாக தமிழகத்திலிருந்து பெரும் பிரஷர் வருவதாகக் கூறும் டெல்லி வட்டாரம், ""தேர்தல் முடியும்வரை இது பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று வேண்டப்பட்டி ருக்கிறது'' என்கிறார்கள்.">சிறுதாவூரில் தொடங்கிய கண்டெய்னர் சர்ச்சை திருப்பூரில் சிக்கி, டெல்லி வரை விவகாரமாகியுள்ளது. -தாமோதரன் பிரகாஷ்,<>அருள்குமார், மனோ

கருத்துகள் இல்லை: