புதன், 18 மே, 2016

தற்கொலை செய்ய வேண்டாம் - மாணவர்களுக்கு சகாயம் வேண்டுகோள்

சென்னை: தேர்வில் மார்க்குகள் குறைவாக பெற்ற மாணவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வில் தோல்வி பயத்தினால் கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தில் இன்று சக்தி கணேஷ் என்ற மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் கூறியிருப்பதாவது: தோல்வி என்பது வெற்றியின் வழிகாட்டியே , மாணவர்கள் யாரும் மனம் தளரக்கூடாது. குறைந்த மார்க்குகள் பெற்றாலும் அறிவியல், கலை உள்ளிட்ட பிரிவுகளில் பல வாய்ப்புகள் உள்ளன. மாணவ, மாணவிகள் யாரும் தற்கொலை செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருணாநிதி வாழ்த்து : பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பதாவது: நுழைவு தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர இந்த ஆண்டு நுழைவுத்தேர்வு உண்டா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும், கவலையில் உள்ளனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் நுழைவுத் தேர்வு பற்றிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து தமிழக மாணவர்கள் நுழைவு தேர்வு இன்றி மருத்துவ படிப்புகளை தொடர வழிகாண வேண்டும் எனக்கூறியுள்ளார்.  dinamalar.com

கருத்துகள் இல்லை: