வெள்ளி, 20 மே, 2016

ராதாபுரம் அதிமுகவால் திருடப்பட்டது... தூக்கி வீசப்பட்ட தி.மு.க. அப்பாவு: அ.தி.மு.க.,49 ஓட்டில் வெற்றி என அறிவிப்பு

திருநெல்வேலி:திருநெல்வேலி ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க.,சார்பில் இன்பதுரையும், தி.மு.க.,சார்பில் அப்பாவும் போட்டியிட்டனர்.அப்பாவு ஏற்கனவே மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். ஓட்டு எண்ணும்போது தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் முன்னும் பின்னுமாக வெற்றியை எட்டிக்கொண்டிருந்தனர். கடைசியில் இன்பதுரை, சுமார் 500 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். மொத்தமுள்ள ஆயிரத்து 700 தபால் ஓட்டுக்களில் அப்பாவுவிற்கு முன்னிலை கிடைக்கும் வாய்ப்பிருந்தது. ஆனால் 200க்கும் மேற்பட்ட ஓட்டுக்களில் சிகப்பு குறி போடப்பட்டிருந்ததுஎன்றும், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்புகை கையொப்பம் பெற்றிருந்தால் செல்லாது எனவும் தள்ளுபடிசெய்தனர்.இதனால் அப்பாவுவிற்கு வரவேண்டிய முறையான ஓட்டுகள் செல்லாத ஓட்டுகள் என அறிவிக்கப்பட்டன.

ஓட்டு எண்ணிமுடிக்கும் தருவாயில் தி.மு.க.,வேட்பாளர் அப்பாவு, நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் உள்ள ராதாபுரம் தொகுதி ஓட்டு எண்ணும் மையத்திற்குவந்தார்.
தபால் ஓட்டுக்களை இத்தகைய முறையில் செல்லாத ஓட்டு என கழிப்பதை எதிர்த்தார். இதற்காக சட்டவிதிமுறைகளைகாண்பித்து அந்த ஓட்டுக்களை சேர்க்க வலியுறுத்தினார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பு பூத் ஏஜன்ட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே அவர்களை போலீசார் அங்கிருந்த வெளியேற்றினர்.
இருப்பினும் அதிகாரிகள் இன்பதுரையை வெற்றிபெற வைப்பதற்கு ஆர்வம் காட்டினர். இதற்காக அந்த வளாகத்தில் பத்திரிகையாளர்களை உள்ளே செல்லவிடாமல் தடுக்க போலீசார் வெளியே நிறுத்தப்பட்டிருந்தனர்.
அப்பாவு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மத்திய ரிசர்வ் போலீசார் அவரை தள்ளி வெளியேற்றினர்.கடைசியாக அ.தி.மு.க.,வின் இன்பதுரை, வெறும் 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனர். பின்னர் அங்கிருந்து வெளியேறிய அப்பாவு, ''தபால் ஓட்டுகளின் குளறுபடி ஏற்படுத்தியதை
கண்டிக்கிறேன்.இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்,'' என்றார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: