திங்கள், 16 மே, 2016

தேர்தல் ஒத்திவைப்பு 'சென்டிமென்ட்' எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு"

Tamilnadu Assembly Election News:  தேர்தல் ஒத்திவைப்பு 'சென்டிமென்ட்' எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்த வரலாறுதிருச்சி:அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை ஒத்தி வைத்துள்ளதால், ஆட்சி பறிபோகும் கடந்த கால, 'சென்டிமென்டை' நினைத்து, அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, மது வினியோகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி தேர்தலை, 23ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் கமிஷன் அறிவித்தது.கடந்த, 25 ஆண்டுகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட போதெல்லாம் ஆளுங்கட்சி தோல்வியை தழுவி,
எதிர்க்கட்சியே ஆட்சியை பிடித்துள்ளது.    போஎஸ் கார்டனில் வண்டு முருகன் தலைமையில் 4 நாட்களாக கேர்ள ஜோதிடர்களும், தஞ்சை வேத விற்பன்னர்களும், தொடர்ந்து ராஜா யோக யாகம் நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இதனால் அந்த ஏரியா முழுவதும் புகை மண்டலமாகவும், வர இருக்கும் பருவமழையை தாமதபடுதிகொண்டு இருபதாகவும் தேசிய பருவமழை பரிணாம ஆணையம் தெரிவித்துள்ளது.


கடந்த, 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது சுயேச்சை வேட்பாளர்கள் இறந்த காரணத்தால், மருங்காபுரி, முசிறி, மதுரை கிழக்குஉள்ளிட்ட நான்கு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மற்ற தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1991ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, எழும்பூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் இறந்த காரணத்தால், அங்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க., வெற்றி பெற்றது.
அடுத்து, 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், நொய்யல் ஆறுபிரச்னை காரணமாக மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட, 1,450க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு தாக்கல் செய்தனர்.
ஓட்டுச்சீட்டு அச்சிட முடியாது என்பதால், மொடக்குறிச்சி தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அந்த தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., ஆட்சியை பிடித்தது.

இப்படி பொதுத்தேர்தலின் போது குறிப்பிட்ட தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட நேரங்களில் எல்லாம், ஆளுங்கட்சி தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், 'சென்டிமென்டாக' தோல்வியடைந்து விடுவோமோ என, அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.  dinamalar.com

கருத்துகள் இல்லை: