செவ்வாய், 17 மே, 2016

அதிமுக தனிப்பெரும் கட்சி: தந்தி டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு

அதிமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று தந்திடிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி 3 இடங்களையும், பாமக 2 இடங்களையும், பாஜக 1 இடத்தையும் கைப்பற்றும். மற்ற 16 தொகுதிகளில் இழுபறி நிலவும் என்று தெரிவித்துள்ளது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளை இந்த கருத்துகணிப்பில் சேர்க்கப்படவில்லை.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தந்தி தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்பதால் இது கவனம் பெறுகிறது.
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் , மே 16-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
தமிழகம் முழுவதும் இறுதி நிலவரப்படி 232 தொகுதிகளிலும் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தில் அதிமுக, திமுக காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக- ம.ந.கூட்டணி - தமாகா அணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி என ஆறுமுனைப் போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தவிர 232 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பை வெளியிட்டது. tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: