வெள்ளி, 1 ஏப்ரல், 2016

காங்கிரஸ் திமுக கூட்டணி உடன்பாடு பூர்த்தி....த மா க வுக்கு இடம் இல்லை.....

தி.மு.க., கூட்டணியில் குறைந்தபட்சம், 40; அதிகபட்சம், 50 தொகுதிகள் பெற வேண்டும் என, தமிழக காங்கிரசுக்கு, டில்லி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.
அதுபற்றி, சென்னை, கோபாலபுரம் இல்லத்தில், நேற்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் ஆலோசனை நடந்தது. பொருளாளர் ஸ்டாலின், மாநில மகளிர் அணி செயலர் கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் பங்கேற்றனர். தீவிர ஆலோசனைக்கு பின், காங்கிரசுக்கு, 32 தொகுதிகள் ஒதுக்கலாம் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அந்த தகவலை, தொலைபேசி மூலமாக, காங்., தலைவர் சோனியாவிடம், கனிமொழி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சோனியாவிடம் இருந்து உடனடியாக பதில் இல்லை.
பங்கீடு பற்றி பேச வந்த, மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத்திடம், 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்றும், த.மா.கா., வந்தால், எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்றும், தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது.
அதனால், அதிருப்தி யடைந்தஆசாத், டில்லி திரும்பியதும், காங்., துணைத் தலைவர் ராகுலிடம், இதை தெரிவித்தார்.

அவர், தமிழக காங்., தலைவர்களை டில்லிக்கு அழைத்து பேசினார். 'தனித்து போட்டியிடுங்கள்' என்றார். அதற்கு விருப்பமில்லாத தமிழக காங்., தலைவர்கள், நேற்று முன்தினம் டில்லியில், குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோரை சந்தித்து பேசினர்.

தனித்து போட்டியிட வேண்டாம் என்றும், தி.மு.க., கூட்டணியில், கூடுதல் தொகுதிகளை கேட்டு வாங்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
அதன்பின்னே, 40 - 50 தொகுதிகள் என, முடிவானது. அந்த தகவலை, தி.மு.க.,வுக்குதெரிவித்தனர். இதையடுத்து, காங்கிரசுக்கான தொகுதிகளில் கறாராக இருக்க வேண்டாம்; கூட்டி, குறைத்து பேசி முடிக்குமாறு, ஸ்டாலினிடம், கருணாநிதி கூறிஉள்ளார். த.மா.கா.,வுக்குஅழைப்பா?: த.மா.கா.,வுடன் கூட்டணி பேச்சு நடப்பதாக கூறப்படுகிறதே? யார் சொன்னது; நான் சொன்னேனா; நான் ஒன்றும் சொல்ல வில்லையே. நீங்களாகவே சொல்கிறீர்கள்; நீங்களே கற்பனை செய்து கொள்கிறீர்கள்; நீங்களே எழுதுகிறீர்கள். நீங்கள் செய்யும் கற்பனைக்கு, நான் உடந்தையாக இருக்க முடியாது.
காங்கிரசுடன் நாளை பேச்சு முடிந்து விடுமா?

முடிந்தவுடன் உங்களிடம் சொல்கிறேன்.
சிறுதாவூர் பங்களா விவகாரத்தில், தேர்தல் கமிஷன் ஆய்வு மேற்கொள்கிறதே?

மகிழ்ச்சி. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: