செவ்வாய், 29 மார்ச், 2016

ஜெயலலிதாவே அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தார் .....ஓவர் ட்ரெயினிங் சந்திரபிரபா

விகடன்.com :மனப்பாடம் செய்து ஓப்பிப்பதுபோல்“தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வம்”என்று கிராமத்து பாணியில் சந்திர பிரபா கூறியதை கேட்ட ஜெயலலிதா விழுந்து விழுந்து சிரித்தாராம்.பின்னர், 'போதும்மா, போதும் இது பொதுக்கூட்ட மேடையில்லை' என்று சொல்லி சிரித்து விட்டு.. என்ன படிச்சிருக்கீங்க என்றாராம். தமிழில் ஆராய்ச்சி பட்டம் வாங்கியிருக்கேன்னு சொல்லவும் அப்படியா என்பதுபோல் பார்த்த ஜெயலலிதா மீண்டும் வாய் விட்டு சிரித்து சரி போய் வா...என்று வாழ்த்து என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். 
விருதுநகர் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணலின்போது ஜெயலலிதாவை புகழ்ந்துபேசி அவரை சிரிக்கவைத்தார் விருதுநகரிலிருந்து வேட்பாளர் தேர்விற்கு சென்ற அதிமுக பெண் தொண்டர் ஒருவர். விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர் சட்டசபை தொகுதிகளை தவிர மீதமுள்ள சட்டசபை தொகுதிகளில் தொகுதிக்கு 3 பேர் வீதம் நேர்காணலுக்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்தது.
இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் சாத்து£ர், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் உள்பட சட்டசபை தொகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் சென்னையில் கடந்த 2 நாட்களாக முகாமிட்டிருந்தனர். நேர்காணலில் முதல்வர் ஜெயலலிதாவிடம் எப்படி நடந்து கொள்வது என்று ஒவ்வொரு நிர்வாகிக்கும் தனித்தனியே பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இதில் ஸ்ரீவில்லிப்புத்துார் சட்டசபை தொகுதியில் இருந்து மாவட்ட கவுன்சிலர் முத்தையாவின் மனைவி சந்திரபிரபா, மாவட்ட துணைச்செயலாளர் வசந்திமான்ராஜ், சீனிவாசன் ஆகியோர் நேர்காணலுக்கு சென்றனர்.

மாவட்ட கவுன்சிலர் முத்தையாவின் மனைவி சந்திரபிரபா எம்.ஏ., தமிழ் முதுநிலைப்படிப்பில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். அதிகம் படித்திருந்தாலும் கிராமத்து பெண்மணியான அவர் எப்போதும் வெகுளியாகவே பேசுவார். முதல்வர் ஜெயலலிதாவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவரது கணவர் முத்தையா தனியாக 2 நாள் கிளாஸ் எடுத்திருந்தார் அவருக்கு.

கணவன் சொல்லே மந்திரம் என்ற ரீதியாக போயஸ் கார்டனுக்குள் நுழைந்த சந்திர பிரபா  நேர்காணல் நடந்த அறைக்குள் நுழைந்ததும்  முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலில் நெடுஞ்சான் கிடையாக காலில் விழுந்து எழுந்ததோடு குனிஞ்சுக்கிட்டே தலையை நிமிராமல் கையை எடுத்து கும்பிட்டப்படி சில நிமிடங்கள் நின்றாராம். ஜெயலலிதா 'சீட்டுல உட்காருங்க' என்று சொன்னதற்கு 'இல்லம்மா' என்று சொல்லி விட்டு...திடீரென “தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வம்”என்று கிராமத்து பாணியில் பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போல் புகழத்தொடங்கி விட்டாராம்.

மனப்பாடம் செய்து ஓப்பிப்பதுபோல் சந்திர பிரபா கூறியதை கேட்ட ஜெயலலிதா விழுந்து விழுந்து சிரித்தாராம்.பின்னர், 'போதும்மா, போதும் இது பொதுக்கூட்ட மேடையில்லை' என்று சொல்லி சிரித்து விட்டு.. என்ன படிச்சிருக்கீங்க என்றாராம். தமிழில் ஆராய்ச்சி பட்டம் வாங்கியிருக்கேன்னு சொல்லவும் அப்படியா என்பதுபோல் பார்த்த ஜெயலலிதா மீண்டும் வாய் விட்டு சிரித்து சரி போய் வா...என்று வாழ்த்து என்று சொல்லி அனுப்பி வைத்தாராம்.

- எம்.கார்த்தி

கருத்துகள் இல்லை: