செவ்வாய், 29 மார்ச், 2016

கிரானைட் வழக்கில் பி.ஆர்.பி (நரபலி) விடுதலை; முன்னாள் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மீது நடவடிக்கை - ஷாக் தீர்ப்பு

மேலுர்: பட்டா நிலத்தில் அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கி வைத்தது தொடர்பாக வழக்கில் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலூர் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் இவ்வழக்கில் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் பி.ஆர். பழனிச்சாமி மற்றும் சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்தும் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். PR Palanisamy acquits in Granite case மதுரை மாவட்டம் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கிரானைட் முறைகேடு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி விசாரித்து வருகிறார். இன்றைய விசாரணையின் போது, வழக்கு தொடர்ந்த மாவட்ட ஆட்சியராக இருந்த அன்சுல் மிஸ்ரா ஏன் ஆஜராகவில்லை என மாஜிஸ்திரேட் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் டெல்லியில் இருப்பதால் உடனே வர முடியவில்லை..ஒருவார கால அவகாசம் கொடுங்கள் நிச்சயம் ஆஜராவார் என்றார் ஆனால் இதை மாஜிஸ்திரேட் நிராகரித்தார். பின்னர் பிற்பகலில் தீர்ப்பளித்த அவர், பட்டா நிலங்களில் அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கி வைத்தது மற்றும் உரிமம் இன்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுத்தது என்று அன்சுல் மிஸ்ரா தொடர்ந்த 2 வழக்குகளில் இருந்து எதிரிகளான பி.ஆர். பழனிச்சாமி, சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்வதாக கூறினார். அத்துடன் ஆட்சித்தலைவர் என்கிற பணியின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கிறார் என்பதை திரும்ப, திரும்ப நம்ப வைத்து ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருந்ததால் அன்சுரல் மிஸ்ரா, அரசு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா ஆகியோரும் அன்சுரல் மிஸ்ராவின் குற்ற செயல்களுக்கு உடந்தையாக இருந்ததால் அவர்கள் மீது 197(1பி) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

Read more at: ://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: