திங்கள், 28 மார்ச், 2016

பொறுப்பில்லாத வைகோ:இல.கணேசன் பாய்ச்சல்...சொந்த வீட்டுக்கே சூனியம் வைகோவின் வாய்

கோவை:''பொது மேடைகளில், பொறுப்பற்ற முறைகளில் பேசுகிறார் வைகோ,'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார். கோவையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில் மேற்கொண்ட நிலைப்பாட்டையே, தற்போதும் பின்பற்றி வருகிறோம். தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு, 16 சதவீத ஓட்டு வங்கி உள்ளது. தற்போது அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணியில் இடம்பெறாமல் உள்ள, சில அரசியல் கட்சிகளோடு கூட்டணியை ஏற்படுத்தி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ஸ்மிருதி ரானி, பா.ஜ., தலைவர் அமித் ஷா உட்பட தலைவர்கள், தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர்.< அசாம், மேற்கு வங்கத்தில், பா.ஜ., ஆட்சியைப் பிடிக்கும். கேரளத்தில், ஆட்சிக்கு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இலவச பொருட்கள் வழங்குவதை தவிர்த்து, மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரிக்க செய்வோம். மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விஜயகாந்தை, ஒருங்கிணைப்பாளர் வைகோ, தொடர்ந்து அவமானப்படுத்துகிறார். பொது மேடையில் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். பிரேமலதா விளக்கம் அளித்தும் கூட, வைகோ பேசி வருவது நல்லதல்ல. இவ்வாறு இல.கணேசன் கூறினார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: