புதன், 30 மார்ச், 2016

ரயில், பஸ்களில் திடீர் சோதனை ராஜேஷ் லக்கானி அறிவிப்பு...TN Election..... Of the Admk for the Admk by the Admk?

சென்னை:''ரயில் மற்றும் பஸ் மூலம், பணம் மற்றும் பொருட்கள் கடத்தப்பட வாய்ப்புள்ளதால், ரயில் நிலையம் மற்றும் பஸ்களிலும், திடீர் சோதனை நடத்தப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
பணம் பறிமுதல்:
தேர்தலில் வாக்காளர்களுக்கு, பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்கப்படுவதை தவிர்க்க, தேர்தல் கமிஷன், மாநிலம் முழுவதும், 702 பறக்கும் படை, 702 நிலை கண்காணிப்பு குழு அமைத்து, வாகன சோதனை நடத்தி வருகிறது.சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.  வைகோ :ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவிற்கு கண்டெய்னரில் கட்டுக் கட்டாக பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது  திடீர் சோதனை எல்லாம் மக்களுக்குத்தான் அதிமுகவுக்கு அல்ல....
பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர், கார், வேன் போன்ற வாகனங்களை மட்டும் சோதனை செய்கின்றனர். இதனால், அரசியல்வாதிகள் ரயில், பஸ் மூலம் பணத்தை எடுத்துச் செல்ல துவங்கி உள்ளனர்.
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிராஜேஷ் லக்கானி கூறியதாவது: உரிய ஆவணங்கள் இன்றிகொண்டு செல்லப்படும் பணம் மட்டும் பறிமுதல் செய்யப்படும். இதுவரை, 16 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 95 சதவீத பணம், உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையம், பஸ்
நிலையம், ரயில், ஆம்னி பஸ் போன்றவற்றிலும் திடீர் சோதனை நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது. இவ்வாறு ராஜேஷ் லக்கானிதெரிவித்தார்.
குவியும் புகார்:
தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, கட்டணமில்லா டெலிபோன் எண், '1950' அறிவிக்கப்பட்டுள்ளது. போனில் தொடர்பு கொள்வோரிடம் பேசுவதற்காக, 100 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று 'ஷிப்டு'களாக பணிபுரிகின்றனர். தொடர்ந்து, 24 மணி நேரமும், ஊழியர்கள் பணியில் உள்ளனர்.தினமும் சராசரியாக, 4,000 பேரும், விடுமுறை நாளில், 7,000 பேரும் தொடர்பு கொள்கின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர், 'வாக்காளர் அடையாள அட்டை வரவில்லை. வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்கவில்லை' என்பது போன்ற புகார்களைதெரிவிக்கின்றனர்.இது தவிர, 'வாட்ஸ் ஆப்'மூலமும், புகார்கள் வருகின்றன. இதுவரை, 530 புகார் 'வாட்ஸ் ஆப்' மூலம் வந்துள்ளது. இவற்றின் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஓட்டளிக்க பயிற்சி:ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், எப்படி ஓட்டளிப்பது என, பொதுமக்களுக்கு விளக்குவதற்காக, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், தலா, 30 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளிப்பது எப்படி என, அதிகாரிகள், பொதுமக்களுக்கு பயிற்சி அளிப்பர்.இத தவிர, 17 சட்டசபை தொகுதிகளில், வாக்காளர்கள் ஓட்டளிக்கும் சின்னம், சீட்டில் அச்சாவதை பார்க்கும் வசதி கொண்ட, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.அந்த தொகுதிகளில், ஓட்டுப்பதிவு குறித்து மக்களுக்கு விளக்க, தலா 10 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களில், மக்கள் ஓட்டளிக்கும் சின்னம் அச்சாகி, பெட்டியில் விழுவதை காணலாம்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: