ஒரு தலித் சமுகத்தை சேர்ந்தவர். எந்தவித பணபலமோ குடும்ப
பாரம்பரியமோ இல்லாத ஆண்டிமுத்து ராசாவின் திறமையையும் அவரின் இலங்கை மலைநாட்டு பூர்விகத்தையும் கருத்தில் கொண்டே அவருக்கு கலைஞர் நீலகிரி தொகுதியைஓதிக்கினார்.பொதுவாகவே திமுகவில் குடும்ப வாரிசுகளுக்கே தொகுதிகள் ஒதுக்க ப்படுவதாக கூறப்படுவதுண்டு . ஆனால் ராசாவுக்கோ எந்த வித குடும்ப செல்வாக்கும் கிடையாது ,அவரிடம் இருந்த தெல்லாம் பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகள்தான். ராசாவின் பெற்றோர் ஆண்டிமுத்து தம்பதிகளின் திருமணம் கதிர்காமத்தில் நடைபெற்றது , பின்பு சிலகாலம் கதிர்காமத்தில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்த அவர்கள் பின்பு நுவரெலியாவில் குடியேறினார்கள். அங்கு ஆண்டிமுத்துவும் அவரது மனைவி சின்னப்பிள்ளையும் தோட்ட கூலிகளாக பணியாற்றினார்கள் . பின்பு காடையர்களின் தாக்குதல்கள் தொடரவே அங்கு இருக்க முடியாது என்ற நிலைக்கு ஆளானார்கள் . அதன்பின் அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வந்து தங்கள் சொந்த ஊரான நீலகிரியில் தங்கினார்கள். அங்கு நான்கு பெண்பிள்ளைகளுக்கு பின்பாக 26 October 1963 இல் ராசா பிறந்தார்
வடக்கு யாழ்ப்பாண தமிழர்கள் மலையகதமிழரை மதிப்பதில்லை. இதன் காரணமாகவும் கூட இந்த யாழ் ஜாதி மையவாத கூட்டம் எப்பொழுதும் ஆர்.ராசா அவர்களை மட்டம் தட்டி அவரை ஒரு உலக மகா ஊழல் பேர்வழி என டமாரம் அடிக்கின்றன. இவர்களுக்கு ஒரு தலித்தை பிடிக்காது . ஒரு மலையகத்தானை பிடிக்காது . ஒரு பகுத்தறிவுவாதியை பிடிக்காது. எல்லாவற்றிலும் மேலாக இவர்கள் எல்லோருக்கும் ஜெயலலிதாவை பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
ஆர்.ராசாவை தாக்குவதாக நினைத்துகொண்டு ஒரு நெட் அனாமதேயம் எழுதியிருக்கும் கீழ்கண்ட வரிகளில் தன்னையும் அறியாமல் ஆர்.ராசாவின் மேன்மைகளை கூறியிருக்கும் வரிகளை பாருங்கள் :
‘‘டம.....டம.....டம....டம...’’ தண்டோராவின் அலறல் சத்தம் காதுகளில் விழுந்து, வேலூர் கிராமத்தின் மொத்தக் கூட்டமும் ஊர் மந்தையில் கூடியிருந்தது.....இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிக்கறது என்னன்னா... லங்கேலையும், மலேயாலையும் இருக்கற நம்ம துரைமார்களுக்கு சொந்தமான எஸ்டேட்ல தோட்ட வேல பாக்கறதுக்கு ஆள் வேணும். தங்கறதுக்கு எடம் தர்றதோட நல்ல கூலியும் கெடைக்கும். விருப்பமிருக்கறவங்க திருச்சி ஜில்லாவுல இருக்கற கலெக்டர் துரையைப் பார்த்து பெயரை குறிச்சுக்கணும். இது துரைமார்களோட உத்தரவு சாமியோவ்... டம...டம...டம...’
தண்டோரா சத்தம் ஓய்ந்து வெகு நேரமாகியும் அந்த சத்தம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது, திருமணமாகி சில மாதங்களேயான கலியனுக்கு.
‘‘போன முறையும் இப்படித்தான் சொல்லிட்டுப் போனானுங்க. அப்பவே நாமல்லாம் கிளம்பி-யிருக்கலாம். அந்த செட்டிகுளத்துக்காரனுங்க அப்பவே போயி நல்லாயிருக்கானுங்களாம்..’’
புது மனைவி அலுத்துக்கொள்ள, முடிவெடுக்கும் வைராக்-கியத்துடன் ஆழ்ந்த சிந்தனை-யிலிருந்தார் கலியன்.
‘நீ சொல்றதும் சரிதான் புள்ள... வேலூர்ல நமக்குன்னு பெரிய மரியாதை இல்லை, சொந்தமா ஒரு காணி இடம் கூட இல்லை, இடம் இருந்தாக் கூட வச்சிக்கற சொத்துரிமை கிடையாது, மரியாதையை இழந்துட்டு எவ்வளவு நாள்தான் இப்படி அடிமையா பண்ணயம் பார்க்கறது?’’
தன் மனதில் அலையடித்த எண்ணங்களின் ஆக்ரமிப்பை மனைவியிடம் கொட்டியவர்... ஒரு முடிவெடுத்தவராய் திருச்சி ஜில்லா கலெக்டர் துரையைப் பார்த்து தன் பெயரையும் பதிந்தார். பரந்து விரிந்த இந்து மகா சமுத்திரத்தின் ஓங்கி உயர்ந்த பெரும் அலைகளின் தாலாட்டில் தள்ளாடியபடியே மிதந்து கொண்டிருந்தது கொழும்பு நோக்கி பயணிக்கும் அந்தக் கப்பல். திருச்சி, புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூர் பக்கமிருந்து இலங்கைக்கு தோட்ட வேலைக்கு செல்லவிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை குடும்பம் குடும்பமாய் அந்தக் கப்பலில் ஏற்றியிருந்தனர் பிரிட்டிஷ் கம்பெனியினர். எஸ்டேட் வேலைக்கு செல்ல சம்மதம் தெரிவித்திருந்த கலியனின் குடும்பமும் இலங்கை செல்வதற்காக அந்த கப்பலில் ஏறியிருந்தது.
1900-ம் வருடத்தின் தொடக்கத்தில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தோட்ட வேலைக்கு சென்ற லட்சோப லட்சம் குடும்பங்களுள் ஒன்றாய் கலியனின் குடும்பமும் கொழும்பு துறைமுகத்தில் கால் வைத்திருக்கிறது. கதிர்காமத்தில் உள்ள ஒரு தேயிலை எஸ்டேட்டில் கூலியாளாகத் தொடங்கியது கலியனின் முதல் வேலை. பிறகு நுவெரெலியா பகுதியில் ஒரு காபி எஸ்டேட்டிலும் சில காலம் கூலியாக இருந்திருக்கிறார் கலியன்.
திருமணமான புதிதிலேயே இலங்கை சென்ற கலியன் முதலில் அப்பாவானது இலங்கையில்தான். அந்த வரிசையில்தான் கலியன் தம்பதியினருக்கு ஆண்டிமுத்து பிறந்திருக்கிறார். எதிர்காலத்தில் இந்தியாவையே ஓர் உலுக்கு உலுக்கப் போகும் வாரிசு, ஆண்டிமுத்து மூலமாய்த்தான் தன் பரம்பரையிலிருந்து வரப்போகிறது என்பதை அப்போது கலியன் அறிந்திருக்கவில்லை.
மழைக்காலம் முடிந்த பின் வந்த வசந்த காலத்தின் தொடக்கம் அது. கார்த்திகைப் பூக்களின் மத்தாப்பூச் சிரிப்பு பார்ப்பவர்களின் மனதை மயக்கிக் கொண்டிருக்க, கதிர்காமம் முருகன் கோயிலில் திரண்டிருந்தனர் கலியன் குடும்பத்தினர். கலியன் இலங்கைக்கு வந்த போதே வேலூர் பக்கமிருக்கும் லாடபுரத்தைச் சேர்ந்த உறவுக்காரரான முத்துசாமியின் குடும்பமும் இலங்கை வந்திருக்கிறார்கள். கலியனின் மகன் ஆண்டிமுத்துவுக்கும், முத்துசாமியின் மகள் சின்னப்பிள்ளைக்கும் கதிர்காமம் கோயிலில் மிக எளிமையாக நடந்தது திருமணம்.
திருமணம் முடிந்த பிறகு கதிர்காமத்திலேயே வசிக்கத் தொடங்கியிருக்கின்றனர் தம்பதியினர். அந்த வருடத்திலேயே சின்னப்பிள்ளை கர்ப்பம் தரிக்க, மகிழ்ச்சிக் கூத்தாடியிருக்கிறார் ஆண்டிமுத்து. பத்து மாதங்கள் கழித்து அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் சின்னப்பிள்ளை. அந்தப் பிள்ளைக்கு விஜயாம்பாள் என பெயர் வைத்தனர்.
1850-ம் வருடத்திலிருந்து படிப்படியாய் இலங்கைக்கு தோட்ட வேலைக்கு சென்ற தமிழர்களின் எண்ணிக்கை 1920 ;ம் வருடத்தின் தொடக்கத்தில் 5 லட்சத்தை தொட்டிருக்கிறது. மலையகத் தமிழர்கள் என அழைக்கப்பட்ட இவர்களுக்கு இலங்கை அரசின் குடியுரிமை கிடையாது. அந்த சமயத்தில் பர்மாவிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் தோட்ட வேலைக்கு சென்ற தமிழர்கள் மூன்று லட்சம் பேர் தாய்நாட்டுக்கே துரத்தப்பட, அதையே காரணம் காட்டி மலையகத் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை தூண்டினார்கள் சிங்களக் காடையர்கள்.
‘மே தெமல பல்லோ காலா எலவண்டே’ (தமிழ் நாய்களை அடித்து விரட்டுங்கள்) என்ற சிங்கள காடையர்களின் வெறி பிடித்த வேட்டை நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டனர் மலையகத் தமிழர்கள். கதிர்காமத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வந்த ஆண்டிமுத்துவும் சிங்களக் காடையர்களின் தாக்குதல் நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டார். இனிமேலும் இலங்கையில் இருந்தால் உயிருடன் வாழ்வது கடினம் என முடிவெடுத்த ஆண்டிமுத்து, தமிழ்நாட்டில் தனது சொந்த ஊருக்கே திரும்பும் முடிவெடுத்திருக்கிறார். தந்தை கலியனோ இலங்கையை விட்டு வரமுடியாது எனச் சொல்லவும், தனது மனைவி சின்னப்பிள்ளையுடன் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு 1940-களின் தொடக்கத்தில் தனது சொந்த ஊரான வேலூருக்கு திரும்புகிறார் ஆண்டிமுத்து.
வேலூரில் பூர்வீக குடிசை வீடு இருந்தது ஆண்டிமுத்துவிற்கு வசதியாய்ப் போனது. இலங்கையில் இருந்து திரும்பும் போது கையிலிருந்த கொஞ்ச பணத்தை வைத்து ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார் ஆண்டிமுத்து. காலச்சக்கரம் சுழல, சுழல இரண்டாவது முறையாய் கர்ப்பமாகிறார் சின்னப்பிள்ளை. அடுத்ததும் பெண் குழந்தையாய் பிறக்க அந்தக் குழந்தைக்கு சரோஜா என பெயர் வைத்திருக்கிறார்கள். அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததில் சற்றே ஏமாற்றமடைந்த ஆண்டி முத்துவின் மனம் ஆண் குழந்தைக்காக ஏங்கத் தொடங்கியது.
சின்னப்பிள்ளை மூன்றாவது தடவையாக கர்ப்பம் தரித்தார். இந்த முறை நமக்கு ஆம்பளைப் பிள்ளைதான் என உறுதியாக நம்பிய தம்பதியினருக்கு மீண்டும் ஏமாற்றம்தான். மூன்றாவதாய் பிறந்த பெண் குழந்தைக்கு கமலா என பெயர் வைத்தனர்.
ஆண்டிமுத்துவின் நான்காவது நம்பிக்கையும் பொய்த்துப்போய் மீண்டும் பெண் குழந்தைதான். அந்த குழந்தைக்கு தமிழரசி எனப் பெயர் வைத்தனர்.
‘ஏதேது அஞ்சு பொட்டப் புள்ளைங்க பொறந்தா அரசனே ஆண்டியாயிடுவான். அப்படின்னா இந்த ஆண்டி என்ன ஆவான்?’ என சலித்துக்கொண்ட ஆண்டிமுத்து... அடுத்து ஆண்குழந்தை பிறக்க-வேண்டும் என்ற நம்பிக்கையோடு தன் குலசாமியை வேண்டப் புறப்பட்டார்.
‘வா புள்ள செங்கணத்துல உள்ள நம்ம குலசாமி கோயிலுக்கே போய் நமக்கு ஒரு சிங்கக் குட்டி பொறப்பானான்னு குறி கேட்ருவோம்’ நம்பிக்கையோடு கிளம்பினார் ஆண்டிமுத்து...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக