வெள்ளி, 8 ஜனவரி, 2016

நீதிபதி நிஷா மீது செருப்பை வீசிய கைதி...பூந்தமல்லி குற்றவியல்....

திருவள்ளூர்: பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற பெண் நீதிபதி மீது
கைதி ஒருவர் செருப்பை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ரயில்வே தளவாடங்களைத் திருடியது, ரயில்களில் வழிப்பறி செய்தது தொடர்பான வழக்குகளில் ஏழுமலை (38) என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்காக ஏழுமலை போலீஸ் பாதுகாப்புடன் நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு பெண் நீதிபதி நிஷா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஏழமலைக்கு 15 நாட்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த ஏழுமலை நீதிபதியை விமர்சித்து தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி வீசியுள்ளார்.குமாரசாமி போன்ற உத்தம நீதிபதிகள் எல்லாம் நீதித்துறையின் கண்ணியத்தை நேர்மையுடன் பாதுகாக்கையில் இவர் இப்படி நிஷாவுக்கு செருப்பு எறிந்தமை வேதனைக்கு உரியது
செருப்பு நீதிபதி மேஜை மீது விழுந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் ஓடிச் சென்று ஏழுமலையை மடக்கி பிடித்துக்கொண்டனர். பின்னர் போலீஸ் வேனுக்கு அழைத்துச் செல்லும்போதும் நீதிபதியை திட்டியப்படியே ஏழுமலை சென்றுள்ளார். நீதிமன்றத்தில் கைதி ஒருவர் நீதிபதி மீது செருப்பை வீசிய சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: