சனி, 9 ஜனவரி, 2016

பிப்ரவரி 2ஆம் தேதி சொத்து குவிப்பு விசாரணை பெங்களூருவில்....2 Gஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையும் பெப்ரவரி டில்லியில்

புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, முதல்வர் ஜெயலலிதா உட்பட
, நான்கு பேரை விடுவித்து, கர்நாடக ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, பிப்ரவரி, 2ம் தேதி துவங்குகிறது. 'அன்று முதல், தினமும் விசாரணை நடக்கும்' என, நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அதேநேரத்தில், '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கிலும், டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், பிப்ரவரியில் இறுதி வாதம் துவங்குகிறது
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உட்பட, நான்கு பேருக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, கர்நாடக சிறப்பு கோர்ட், 2014 செப்டம்பரில் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா உட்பட, நான்கு பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்தார்.  இனி இரண்டு கழகங்களையும் வழக்குகளில் முடக்கி விட்டு வைகோ, அன்புமணி, சீமான், தமிழிசை, தமிழருவி, விஜயகாந்து மற்றும் திருமாவளவன்  எல்லாரையும் சி எம் ஆக்கிடலாம்ல கோவாலு ?

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, 2015 மே, 11ல், நால்வரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக மாநில அரசு, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

கர்நாடக அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவில், 'ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை கணக்கிட்டதில்,
நீதிபதி குமாரசாமி தவறு செய்து விட்டார். ஐகோர்ட்டில், ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், எங்கள் அரசை பிரதிவாதியாக சேர்க்கவில்லை' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஜெயலலிதா உட்பட, நான்கு பேருக்கு எதிரான மேல் முறையீட்டு மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிபதிகள் பி.சி.கோஷ், அமிதவா ராய் ஆகியோர் இடம் பெற்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு:

ஜெயலலிதா உட்பட, நான்கு பேருக்கு எதிரான, மேல் முறையீட்டு மனுக்கள் மீதானவிசாரணை, பிப்., 2ல் துவங்கும். தொடர்ந்து, பிப்., 3, 4 தேதிகளிலும் விசாரணை நடத்தப்படும். இவ்வழக்கில், சுட்டிக்காட்ட விரும்பும் முக்கிய விஷயங்கள் அடங்கிய பட்டியலை, இரு தரப்பு வழக்கறிஞர்களும், அடுத்த இரு வாரத்துக்குள், சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சாமியின் வாதம்: ஜெ., வழக்கில் தன்னையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்துக் கொண்டுள்ள, பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சாமி, வழக்கில் தான் கூற விரும்பும் முக்கிய அம்சங்கள் அடங்கிய குறிப்பேட்டை, சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:
ஜெ., வழக்கில், கர்நாடகா ஐகோர்ட் தீர்ப்பை அப்படியே ஏற்றாலும், ஜெயலலிதாவின் வருவாய்க்கு அதிகமான சொத்து மதிப்பு, 16.32 கோடியாக இருக்கும். இது, கர்நாடகா ஐகோர்ட் கூறியுள்ள, 8.12 சதவீதத்துக்கு மாறாக, 76 சதவீதமாக இருக்கும். எனவே, ஜெயலலிதாவை விடுதலை செய்தது தவறு. இவ்வாறு சாமி கூறியுள்ளார்.

கனிமொழி வழக்கு பிப்., 1ல் விசாரணை: '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த
Advertisement
வழக்கில், சி.பி.ஐ., தரப்பு வாதமானது,டிச., 22ல் முடிவடைந்தது. இதையடுத்து, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் தரப்பு வாதங்கள் நடைபெற உள்ளன. இந்த இறுதி வாதங்கள், பிப்., 1 முதல் நடைபெறும் என, சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி, டிச., 22ல் அறிவித்திருந்தார்.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில், பிப்., 2 முதல் தொடர்ந்து நடக்கவுள்ள நிலையில், ஒரு நாள் முன்னதாக, பிப்., 1 முதல், கனிமொழி, ராஜா தொடர்பான வழக்கு விசாரணை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கணக்கு தப்பு: தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு விவரம்:கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில், சொத்து மதிப்பை கணக்கிட்டதில் பிழை உள்ளது. இதை சரியாக கணக்கிட்டால், ஜெயலலிதாவின் வருவாய்க்கு அதிகமான சொத்து மதிப்பு, 10 சதவீதத்துக்கும் அதிகம். குற்றம் சாட்டப்பட்டவர் அளித்த சொத்துக் கணக்கை, நீதிபதி அப்படியே ஏற்றுக் கொண்டது தவறு. இவ்வாறு அன்பழகன் மனுவில் கூறப்பட்டுள்ளது
.
அதிகாரம் கிடையாது: ஜெயலலிதா சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு விவரம்:கர்நாடகா ஐகோர்ட் அளித்த தீர்ப்பில், கணக்கு பிழை எதுவும் இல்லை. இவ்வழக்கில், மேல் முறையீடு செய்ய, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் இயக்குனருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்ய அதிகாரம் கிடையாது. எனவே, விடுதலையை எதிர்க்கும், மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா மனுவில் கூறப்பட்டுள்ளது  dinamalar.com

கருத்துகள் இல்லை: