செவ்வாய், 5 ஜனவரி, 2016

உலகின் மிகப்பெரிய நீலநிற இரத்தினக்கல் இலங்கையில்....100 மில்லியன் அமெரிக்க டாலர்கள்


முதல் முறையாக உலகின் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். ‘த ஸ்டார் ஆப் ஆடம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ப்ளூ ஸ்டார் சபையர் என்ற மாணிக்கக்கல் 1404.49 காரட் நிறை கொண்டது.இதன் சந்தை மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், பெயர் வெளியிட விரும்பாத இந்தக் கல்லின் தற்போதைய உரிமையாளர் இந்த மாணிக்க கல்லை 175 மில்லியன் டாலர்கள் வரை (சுமார் ஆயிரத்து நூறு கோடி ரூபாய்) ஏலத்தில் விற்பனை செய்ய முடியும் என்றும் அழகுக்கல் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த மாணிக்கக்கல் ‘இரத்தினங்களின் நகரம்’ என்று அழைக்கப்படும் இலங்கையின் இரத்தினபுரி பகுதியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக்கல் என்ற உலக சாதனைப் பட்டியலில் தற்போது உள்ள மாணிக்கக்கல் 1,395 காரட் நிறை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: