வியாழன், 7 ஜனவரி, 2016

17600000 கோடி 2G ஸ்பெக்ட்ரம் பிரசாரம்....இப்போது 200 கோடியாக சுருங்கியது ...அதுவும் கடன்...

புதுடில்லி: 'தி.மு.க.,வால் நடத்தப்படும் கலைஞர், 'டிவி'க்கு, குஸேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் நிறுவனம் மூலமாக, 200 கோடி ரூபாய் பணம் கடனாக கொடுத்த  விவகாரத்தில் உண்மை தன்மை இல்லை' என, அமலாக்க இயக்ககம் கூறியுள்ளது.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் இறுதிக்கட்ட விவாதங்கள், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி முன் நடந்து வருகின்றன. அமலாக்க இயக்ககம் தொடர்ந்த, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான விசாரணையில், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் நேற்று வாதிட்டதாவது: தி.மு.க.,வால் நடத்தப்படும் கலைஞர், 'டிவி'க்கு, குஸேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் நிறுவனம், சினியுக் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக, 200 கோடி ரூபாய் பணம கடனாக கொடுக்கப்பட்டு  உள்ளது. இந்நிறுவனங்கள், உண்மையான வர்த்தக பரிவர்த்தனைகளில் ஈடுபடவில்லை. 200 கோடி ரூபாய் பணத்தை பரிமாற்றம் செய்யும் நோக்கில், போலியாக இந்த நிறுவனங்கள் துவக்கப்பட்டு உள்ளன என்று தற்போது சிபியை வழக்கறிஞர் வாதிட்டார்.   ராசா ஒரு தலித்தாக ஒரு திமுக காரனாக ஒரு தேயிலைதோட்ட கூலி பரம்பரையாக இருப்பதெல்லாம் அவா பொறுப்பாளா?


இந்த விவகாரத்தில், இரு நிறுவனங்களின் செயல்பாடுகள் அனைத்தும், போலியாக ஜோடிக்கப்பட்டவை. குஸேகான் நிறுவனம், விவசாயம் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபடுவதாக கூறிக் கொள்கிறது. அப்படி இருக்கையில், 'டிவி' நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன? அதுபற்றி, அந்த நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.ஒரு நிறுவனத்துக்கு, 200 கோடி ரூபாய் அளவுக்கு பணம் தரும் பட்சத்தில், பணத்தை திருப்பி பெறுவதற்கு தக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இவ்வாறுஆனந்த் குரோவர் வாதிட்டார். அவரின் வாதம் இன்றும் தொடர உள்ளது. தி.மு.க.,வை சேர்ந்த ஏ.ராஜா, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், தொலை தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டது. இதற்கு பிரதிபலனாக, டி.பி., குழுமம், போலியான நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலமாக, தி.மு.க., நடத்தும் கலைஞர், 'டிவி'க்கு, 200 கோடி ரூபாயை அளித்ததாக, அமலாக்க இயக்ககம் குற்றம் சாட்டியுள்ளது. இம்மோசடிக்கான திட்டம், தி.மு.க., - எம்.பி., கனிமொழி, அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், ஏ.ராஜா மற்றும், 16 பேரால் வகுக்கப்பட்டதாகவும், அமலாக்க இயக்ககம் கூறுகிறது. கடனாக பெறப்பட்ட தொகை முழுவதும் திருப்பி செலுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: