திங்கள், 4 ஜனவரி, 2016

இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்:ஒருவர் பலி: 8 பேர் காயம்

இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார். 8 பேர் காயமடைந்தனர்.இந்தியா-மியான்மர் எல்லையருகே மணிப்பூரை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை 4.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கம், இம்பால் நகருக்கு மேற்கு-வடக்கே 33கி.மீ., தொலைவில் மையம் கொண்டதாக இந்திய வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தையடுத்து இம்பால் நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது.
அசாம், பீகார், அருணாசல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.பிரதமர் மோடி விசாரிப்பு:அசாம் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, நிலநடுக்க நிலவரம் குறித்து வீசாரித்தார். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தார். dinamalar.com

கருத்துகள் இல்லை: