செவ்வாய், 5 ஜனவரி, 2016

புல்லட் ரயில் சேவை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

துடில்லி :மும்பை - ஆமதாபாத் இடையேயான, நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதையை, ஐந்தாண்டுகளுக்கு பின், தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன், மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை - குஜராத்தின் தொழில் நகரமான ஆமதாபாத் இடையே, நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்தப் பாதையில், புல்லட் ரயில் சேவை துவங்கிய, முதல் ஐந்தாண்டுகளுக்கு, அது, ரயில்வேயின் பராமரிப்பில் இருக்கும். அதன்பின், புல்லட் ரயில் சேவைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும்.   அதான் அம்பானி, அதானி போன்ற குஜராத்திகளின் கம்பனிகள் இருகின்றதே அப்புறம் என்ன? மோடி அவர்களின் கனவு நனவாக போகிறது



நிதிச்சுமை ஏற்படும்:
புல்லட் ரயில்கள் மற்றும் தண்டவாளங்களை பராமரித்தல், கட்டண வசூல் உள்ளிட்ட பணிகள்
அனைத்தையும், தனியார் நிறுவனங்கள் கவனித்துக் கொள்ளும். 'நிடி ஆயோக்' அமைப்பின் துணைத் தலைவரான அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, புல்லட் ரயில் சேவைகளை தனியார் வசம் ஒப்படைக்கும்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புல்லட் ரயில் சேவையை அளிப்பதால், ரயில்வேக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும். இதை தவிர்க்கும் நோக்கில், இச்சேவைகளை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புல்லட் ரயில் திட்ட செலவில், 81 சதவீத நிதியை, ஜப்பான் அரசு அளிக்கிறது. அந்நாட்டில் ஓடிக் கொண்டிருக்கும், 'ஷிங்கான்ஸென்' புல்லட் ரயில் சேவைகள், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதே, 'பார்முலா'வை இந்தியாவிலும் பின்பற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இருப்பினும், ரயில்வே கட்டமைப்புகள் அனைத்தும், அரசுக்கு சொந்தமானதாகவே தொடரும் என, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

தொழில் கொள்கை:
ரயில்வேயில், தனியார் துறையை புகுத்தும்

வகையில், தக்க தொழில் கொள்கையை, ரயில்வே வகுக்கும் என, தெரிகிறது. புல்லட் ரயில் சேவையை அளிப்பதில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை, ரயில்வேக்கு அளிப்பது; அல்லது குறிப்பிட்ட ஒரு தொகையை, ரயில்வேக்கு செலுத்தி விட்டு, ரயில்வே சேவைகளை ஏற்பது என, இரு வாய்ப்புகளில் ஒன்றை, தனியார் துறைக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மும்பை - ஆமதாபாத் இடையேயான, புல்லட் ரயில் சேவை, 2022ல் துவங்கும் எனவும், அதற்குள் தாமதமின்றி திட்டத்தை நிறைவேற்றுவதில், பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார் என்றும், அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன  தினமலர்.com

கருத்துகள் இல்லை: