மும்பை: பாக்கிஸ்தான் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதி
மக்கள் இந்தியாவுடன் இணைய தயாராக உள்ளதாக கில்கிட் -பால்டிஸ்தான் ஆய்வு
நிறுவன தலைவர் செங்கே ஹஸ்னன் சேரிங் தெரிவித்துள்ளார்.
இது
குறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாக்.,
ஆக்ரமிப்பு பகுதியை சேர்ந்த கில்கிட்-பால்டிஸ்தான் பகுதி சுமார் 72
ஆயிரத்து 971 ச.கி.மீ., தூரம் பரப்பளவு கொண்டுள்ளது. இப்பகுதியில் சுமார்
18 லட்சம் மக்கள் வசி்த்து வருகின்றனர். 7 மாவட்டங்கள், 33 சட்டசபை
தொகுதிகளை கொண்டுள்ள இப்பகுதி மக்கள் தற்போது இந்தியாவுடன் இணைய விருப்பம்
தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் இப்பகுதி மக்களை தனது காலனி ஆதிக்க பகுதியாக கருதி வருகிறது. மேலும் உயர்கல்வி கற்பதற்கு வசதிகள் இல்லை, அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது, இது குறித்து போராட்டம் நடத்தும் பட்சத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இப்பகுதியை சர்ச்சைக்குரிய பகுதியாக பாகிஸ்தான் அறிவித்துள்ளதால் எங்களை அந்நாட்டின் குடிமக்களாக பாக்., கருத கூடாது என செங்கே ஹஸ்னன்தெரிவித்தார். இதனை கருத்தில்கொண்டு இப்பகுதி மக்கள் இந்தியாவுடன் சேர ஆர்வம் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் இந்திய அரசு தன்னுடன் இணைத்து கொள்ள ஆர்வம் காட்ட வில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக