இது குறித்து அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆனந்த் சர்மா கூறியதாவது:-
அன்னிய மண்ணில், குறிப்பாக ஜெர்மனியிலும், கனடாவில் பிரதமர் பேசி இருப்பது மோசமானதாகும். 2014 தேர்தல் பிரசாரத்தைத்தான் அவர் இன்னும் தொடர்கிறார் என்பது தெளிவு.
நினைவுபடுத்த வேண்டும்
அவர் அன்னிய மண்ணில், தனக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களை, தற்போதைய எதிர்க்கட்சியினரை அவதூறாக பேசி உள்ளார். இதுபோன்று இந்தியாவின் எந்தவொரு பிரதமரும் ஒருபோதும் செய்தது இல்லை.
நாடு ஊழலால் அறியப்பட்டுள்ளது என்று அவர் கூறி இருக்கிறார். அவர் தனது பதவியின் கண்ணியத்தை குறைக்கிற வகையில்தான் இப்படி பேசி உள்ளார்.
மோடி ஒரு வலுவான பொருளாதாரத்தை, எழுச்சிமிக்க இந்தியாவைத்தான் மரபுரிமையாக எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதை நினைவுபடுத்த வேண்டும்.
தவறான தகவல்
இந்தியாவை வளமான நாடாக, வலிமை வாய்ந்த நாடாக, மக்கள் பலம் கொண்ட நாடாக உலகம் இப்போதுதான் முதல் முறையாக அங்கீகரித்துள்ளது என்று மோடி நினைத்தால், அவருக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது அல்லது அவர் அதீத மாயையில் இருக்கிறார் என்றுதான் பொருள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக