முன்னாள் முதல்வர் ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக உயர்
நீதிமன்றம் தீர்ப்பு வழங்க, உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை; ஆனால்,
வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, தீர்ப்பு வழங்குவாரா என்ற கேள்வி
எழுந்துள்ள்ளது அரசு
வழக்கறிஞர் பவானிசிங் நியமனத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில்,
தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தொடர்ந்த மனுவை, நீதிபதிகள் மதன் லோகூர்,
பானுமதி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.நீதிபதிகள் இருவரும்,
தனித்தனியே உத்தரவு பிறப்பித்தனர். தீர்ப்பு மாறுபட்டதால், இந்த வழக்கு,
மூன்று நீதிபதிகள் எண்ணிக்கையை கொண்ட, 'பெஞ்ச்' விசாரணைக்கு
செல்கிறது.பொதுவாக, உயர் நீதிமன்றங்களில், இவ்வாறு மாறுபட்ட தீர்ப்பை
வழங்கும்போது, அந்த வழக்கை, மூன்றாவதாக ஒரு நீதிபதி விசாரிப்பார். அந்த
நீதிபதி வழங்கும் உத்தரவைப் பொறுத்து, முடிவு மாறும்.உதாரணத்துக்கு,
பவானிசிங் நியமனம் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில்
விசாரிக்கப்படுகிறது என எடுத்து கொள்வோம். இரண்டு நீதிபதிகள், இந்த வழக்கை
விசாரிக்கின்றனர். அடிமைகள் எடுத்த பால் காவடி அன்னக்காவடி , தீச்சட்டி , மண்சோறு
சாப்புட்டுட்டு,, வேப்பிலை கட்டிக்கிட்டு தீமிதிச்சு யாகம் பண்றத பாத்த
கடவுள் ரொம்ப கன்பியுஸ் ஆகி இந்த மாதிரி எல்லாம் இழுத்தடிக்கிராரோ ?
ஒரு நீதிபதி, 'நியமனம் செல்லும்' என்றும், மற்றொரு நீதிபதி, 'செல்லாது' என்றும், உத்தரவு பிறப்பிக்கின்றனர். அப்போது, அந்த வழக்கு, மூன்றாவது நீதிபதி ஒருவரின் விசாரணைக்கு அனுப்பப்படும்.அந்த நீதிபதி, 'நியமனம் செல்லும்' என, தீர்ப்பளித்தால், ஏற்கனவே, ஒரு நீதிபதி, 'செல்லும்' என தீர்ப்பளித்திருப்பதால், 'நியமனம் செல்லும்' என்பது, இறுதி தீர்ப்பாக அமையும். எனவே, மூன்றாவது நீதிபதியின் முடிவைப் பொறுத்து, தீர்ப்பு அமையும்.உச்ச நீதிமன்றத்தில், அவ்வாறு இல்லை; இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கும் போது, அந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட, 'பெஞ்ச்' விசாரணைக்கு அனுப்பப்படுகிறது.
இனிமேல், அந்த, 'பெஞ்ச்'சில் உள்ள நீதிபதிகள், யார் யார் என்பதை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும். அவர் முடிவெடுத்து, நீதிபதிகளை நியமித்த பின், வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும்.தற்போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்பழகன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தீர்ப்பை, 15ம் தேதி வரை வழங்க வேண்டாம்' என, கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. தற்போது, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டதால், தீர்ப்பு வழங்குவது, நீதிபதி குமாரசாமியின் கையில் உள்ளது.அ.தி.மு.க.,வினரைப் பொறுத்தவரை, 16ம் தேதி (இன்று) தீர்ப்பு வெளிவந்து விடும் என, மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பில், பலத்த அடி விழுந்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தடை ஏதும் விதிக்காத நிலையில், நீதிபதி குமாரசாமி ஏன் தீர்ப்பு வழங்க கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.சட்ட ரீதியாக அவருக்கு தடை இல்லை என்றாலும், தார்மீக அடிப்படையில் பார்த்தால், தீர்ப்பு வழங்க மாட்டார் என்றே கூறப்படுகிறது. நீதிபதி குமாரசாமியைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றம் விதித்த வரம்பின்படி, மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து விட்டார்.இந்த வழக்கில், அரசு வழக்கறிஞர் நியமனம் பற்றி அடிப்படை பிரச்னை எழுப்பப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்ற விசாரணையின் முடிவில், 'அரசு வழக்கறிஞர் பவானிசிங் நியமனம் செல்லாது' என, உத்தரவிடப்பட்டால், உயர் நீதிமன்ற உத்தரவு கேள்விக்குறியாக விடும்.மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தாலும், அந்த வழக்கில் முடிவு வரும் வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியாது என்றே, வழக்கறிஞர்களும் கூறுகின்றனர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ஜாமின் மனு, 17ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும் என, வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது தினமலர்.com

தார்மீக அடிப்படை:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக