வியாழன், 16 ஏப்ரல், 2015

மன்மோகனை தவறாக வழிநடத்தினாராம் ராஜா! சி.பி.ஐ., வழக்கறிஞர் வாதம் !அவிரு பாப்பா பாருங்க?

புதுடில்லி: '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரித்து வரும் டில்லி சிறப்பு கோர்ட்டில், சி.பி.ஐ., நேற்று எடுத்து வைத்த வாதத்தில், 'தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க ஏதுவாக, பிரதமருக்கு தவறாக வழிகாட்டினார்' என, தெரிவிக்கப்பட்டது.முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் அரசில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக, ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி மற்றும் நபர்கள், நிறுவனங்கள் என, 15 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.கடந்த, 2011 அக்டோபரில், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.   2007 க்கு முன் பெரிய 6 நிறுவன்கங்கள் தான் தொலைபேசி லைசன்ஸ் வைத்திருந்தன அவர்கள் கட்டணம் நிமிஷத்திற்கு 3 ரூபாய் ..தயாநிதிதான் இந்த நிறுவனங்களின் எகொபதியத்தை குறைக்க அரசு நிறுவனமான பி எஸ் என் எல் மூலமாக ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் , ஒரே இந்திய ஒரே ரூபாய் என்ற திட்டத்தை போட்டு ஒரு போட்டியை உருவாக்கினார்...அடுத்து வந்த ராசா  இந்த சிறு நிறுவனங்களுக்கு கொடுத்தவுடன் போட்டி அதிகமாகியது...ஒரு ரூபாய் கட்டணம் வெறும் 25 பைசாவுக்கு வந்தது...25 கோடி செல்போன் உபயோகிப்பாளராக இருந்தது 75 கோடி உபயோகிப்பாளராக உயர்ந்தது அதில் அரசு வருமானமும் கூடியது..கட்டணம் குறைந்ததால் ரிக்சாகாரர் , கூலி தொழிலாளர் , வீட்டு வேலை செயபவர்கள் , கிராமத்து மக்கள் கைகளில் செல்போன் சென்றடைந்து ஒரு தொலை தொடர்பு புரட்சியே நடந்தது...அது வரை மிஸ்சுடு கால் பேர்வழி என்று வசதியானவர்களால் கேலி செய்ய பட்டவர்கள் வசதி படைத்தவர்களுக்கு இணையாக் கால் செய்து பெரும் காலம் வந்தது...இப்போ ஏலம் முறை வந்து அதனால் அரசுக்கு கூடுதல் வருமானம் ஒரு லட்சம் கோடி வருகிறது என்கிறார்கள்.. அனால் இதை செல்போனே நிறுவனங்கள் அடுத்த 20 வருசங்களில் தங்கள் கையில் இருந்து கட்ட போவதில்லை ..கட்டணத்தை கூட்டி அதை கட்ட போகிறார்கள்... இப்போதே மகாராஷ்டிர ஆந்த்ராவில் 10 இல் இருந்து 15 பைசே கூட்ட போகிறார்கள்..
அதன் மீது, 2011 நவம்பர் முதல், வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.குற்றப்பத்திரிகையில், 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கின் இறுதி வாதம், நேற்று துவங்கியது.நீதிபதி, ஓ.பி.சைனி தலைமையிலான சிறப்பு கோர்ட்டில், சி.பி.ஐ., சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் நேற்று வாதாடினார்.

அதன் முக்கிய அம்சங்களாவன:
*தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிறருடன் சேர்ந்து சதிச் செயலில் ஈடுபட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிறுவனங்களுக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை வழங்குவதற்காக, 'கட் - ஆப்' தேதியை முன்னதாக ஆக்கினார்.
*'ஸ்வான் டெலிகாம் பிரைவேட் லிமிடெட் மற்றும் யுனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) லிமிடெட்' போன்ற தகுதியே இல்லாத நிறுவனங்களுக்கு, ஒதுக்கீட்டை வழங்கினார்.
*இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சில நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக, 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையை அறிவித்தார்.
*கடந்த 2007, நவம்பர் 2ல், அப்போதைய பிரதமர் மன்மோகனுக்கு, ராஜா எழுதிய கடிதத்தில், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை மற்றும் கட் - ஆப் தேதி மாற்றங்கள் குறித்து தவறான வழிகாட்டுதலை வழங்கினார்.
*யுனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கீடு கிடைக்க ஏதுவாக, அந்த நிறுவனம் விண்ணப்பத்தை வழங்க வசதியாக, கட் - ஆட் தேதியை, ராஜா மாற்றியமைத்தார்.இவ்வாறு, சிறப்பு அரசு வழக்கறிஞர் குரோவர் தன் வாதத்தில் தெரிவித்தார்.இந்த வழக்கின் இறுதி வாதம், அடுத்த மாதம், 25ல் தொடரும் என, நேற்று
அறிவிக்கப்பட்டது.


தி.மு.க.,வுக்கு நெருக்கடி:

ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள சொத்து குவிப்பு வழக்கில், அவர் தண்டிக்கப்பட்டிருப்பதைக் காட்டித்தான், தற்போது தி.மு.க., தரப்பு அரசியல் செய்து வருகிறது. இப்படி அவர் தண்டிக்கப்பட்டிருப்பதால், அ.தி.மு.க.,வோடு கூட்டணி அமைக்க பல கட்சிகளும் யோசித்து, தங்கள் பக்கம் வருவர் என, தி.மு.க., தரப்பு எதிர்பார்த்தது. ஆனால், 2ஜி வழக்கில், சி.பி.ஐ.,யின் இறுதி வாதம், ஒட்டுமொத்த தி.மு.க., செயல்பாடுகளையும் குலைத்துள்ளது. இந்நிலையில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, பல கட்சிகள் யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன தினமலர்.com

கருத்துகள் இல்லை: