திங்கள், 13 ஏப்ரல், 2015

காஷ்மீர் பண்டிட் களுக்கு தனியான ஸ்மார்ட் நகரம்! அனுபம் கேர் !


காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்களுக்கு தனியாக ஸ்மார்ட் நகரம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என பிரபல நடிகர் அனுபம் கெர் கூறியுள்ளார். ரூட்ஸ் இன் காஷ்மீர் என்ற அமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் ”சட்டப்பிரிவு 370, பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் இடம் வாங்குவதை தடை செய்கிறது. எனவே அந்த சட்டத்தை நீக்கவேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகளால் காஷ்மீரில் இருந்து விரட்டப்பட்ட பண்டிட்களை அங்கு மீண்டும் குடி அமர்த்தவேண்டும். அதற்காக தனியாக ஒரு ஸ்மார்ட் நகரத்தை உருவாக்க வேண்டும்” என கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் மத்திய அரசு காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்களுக்கு தனியாக ஒரு குடியிருப்பு பகுதியை உருவாக்கும் யோசனையை முன் மொழிந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் அம்மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தனி குடியிருப்பு பகுதி என்ற திட்டத்தை நிராகரித்து உள்ளார் அம்மாநில முதல்வர் முப்தி முகமது சயீது. ஆனால் பண்டிட்கள் திரும்ப காஷ்மீர்ல் வந்து குடியேர அனைத்து வசதிகளும் செய்யப்படும். ஆனால் தனியாக இல்லாமல் அனைவருடனும் சேர்ந்து வசிக்கும் படியான திட்டமாகவே அது இருக்கும். பண்டிட்டுகளும் அதேதான் விரும்புவதாக அவர் தெரிவித்து உள்ளார்.

மக்களை பிரித்து வைத்திருப்பதன் மூலமே அரசியல் கட்சிகள் லாபம் அடைய முடியும் என்பதால் குறிப்பிட்ட மக்களுக்கு தனி குடியிருப்பு பகுதிகள் என்ற திட்டத்தை முன்வைக்கின்றன. ஆனால் இது மிகவும் ஆபத்தான வழிமுறை. இதே கோரிக்கையை எல்லா சாதி, மதத்தினரும் முன்வைத்தால் என்ன ஆவது என்று சமூக ஆர்வளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: