ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தீர்ப்பு வழங்கிய இரு நீதிபதிகளான பானுமதி மற்றும் மதன் பி லோகூர் இடையே முரண்பாடு ஏற்பட்டது. வழக்கு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு இந்த ஒட்டுமொத்த வழக்கும் உதாரணம் என்று கூறிய நீதிபதி லோகூர், அன்பழகனை மனுதாரராக ஏற்க மறுத்ததுடன், பவானி சிங் இவ்வழக்கில் ஆஜராக முடியாது என்று தீர்ப்பளித்தார்.
ஆனால் மற்றொரு நீதிபதியான பானுமதி, அன்பழகனை மனுதாரராக ஏற்றுக்கொண்டதுடன், பவானி சிங்கும் விசாரணைக்கு ஆஜராகலாம் என தீர்ப்பளித்தார். ( நீதிபதி பானுமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் !)இரு நீதிபதிகளுக்கிடையே தீர்ப்பில் வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், வழக்கை 3 பேர் கொண்ட டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் சொத்து குவிப்பு வழக்கின் மீதான தீர்ப்பு மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக