ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்
பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர்
சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த மாநில சிறப்பு அதிரடிப்படை
போலீஸாருக்கு (எஸ்.டி.எஃப்.) எதிராக கொலை வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, இந்தத் தகவலை ஆந்திர மாநில அரசு தெரிவித்தது.
இதுதொடர்பான வழக்கு, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தலைமை
நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா, நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் ஆகியோரைக்
கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆந்திர அரசின்
சார்பில் கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞர் (ஏ.ஏ.ஜி.) டி. ஸ்ரீநிவாஸ்
ஆஜராகி வாதாடியதாவது: இந்த ஆளு ஏன் எல்லா போட்டோக்களிலேயும் இப்படி திருட்டு முழி முழிக்கிறார்? NTR தூங்கும் போது கட்சியையே திருடின புத்திசாலி வேற எப்படி இருப்பாய்ன்
இந்தச் சம்பவம் தொடர்பாக 302 (கொலை), 364 (கடத்தல்
அல்லது கொலை செய்வதற்காக கடத்தல்), 34 (பொதுவான உள்நோக்கத்துடன் பல்வேறு
நபர்கள் கூட்டாகச் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ், ஆந்திர போலீஸார்
வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெயர்கள் குறிப்பிடப்படாத, ஆந்திர மாநில
சிறப்பு அதிரடிப்படை போலீஸார் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட தமிழகத்தைச்
சேர்ந்த சசிகுமாரின் மனைவி முனியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில்,
முதல் தகவல் அறிக்கையை ஆந்திர போலீஸார் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம்
தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பதற்கான
நடவடிக்கையிலும் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது என்றார் அவர்.
"உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரிக்கை':
இந்நிலையில், ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வழக்கு
விசாரணையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சசிகுமாரின் மனைவி
முனியம்மாள் ஆஜராகியிருந்தார். அப்போது அவர் வழக்குரைஞர் மூலம், தனது கணவர்
உள்ளிட்ட 6 பேரின் உடல்களை மருத்துவ நிபுணர்கள் மூலம் மறுபிரேத பரிசோதனை
நடத்தவும், அதை விடியோவாக பதிவு செய்யவும் ஆந்திர அரசுக்கு உத்தரவிட
வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த ஹைதராபாத் உயர் நீதிமன்றம், பிரேத
பரிசோதனை தொடர்பான அறிக்கையையும், இறப்பு தொடர்பான ஆய்வு அறிக்கையையும்
வியாழக்கிழமை (ஏப்.16) தாக்கல் செய்யும்படி கூடுதல் அரசுத் தலைமை
வழக்குரைஞர் ஸ்ரீநிவாஸூக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை ஆந்திர
சிறப்பு அதிரடிப்படை போலீஸார் சுட்டுக் கொன்றனர். அவர்கள் 20 பேரும்
செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகவும், அதைத் தடுக்க முயன்ற ஆந்திர வனத்
துறையினர் மீது கோடரி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதால் துப்பாக்கிச்சூடு
நடத்தப்பட்டதாகவும் அதிரடிப்படை போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தானாக வழக்குப்பதிவு செய்து,
ஹைதராபாத் உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த முறை நடைபெற்ற
வழக்கு விசாரணையின்போது, ஆந்திர போலீஸாரிடம் சரமாரியாக ஹைதராபாத் உயர்
நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. இதுதொடர்பாக ஏன் கொலை வழக்குப் பதிவு
செய்யவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஆந்திர போலீஸாரிடம்
ஹைதராபாத் உயர் நீதிமன்றம் கேட்டது. மேலும், இதுகுறித்து சந்திரகிரி காவல்
நிலையத்தில் புகார் அளிக்குமாறும் பாதிக்கப்பட்ட முனியம்மாளை உயர்
நீதிமன்றம் கேட்டுக் கொண்டது dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக