திங்கள், 16 மார்ச், 2015

கேரள அரசை கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை? சதாசிவம் பாஜகாவுக்கு நன்றிகடன்?

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் நடந்து கொண்ட விதம், அரசியலமைப்பு சட்டத்தின், 356வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைக்குமாறு, ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும் வகையில் இருந்ததாக, மாநில கவர்னர் சதாசிவம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். கவர்னரின் இந்த செயல், மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில், காங்., முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, சமீபத்தில் மாநில நிதியமைச்சர் மணி தாக்கல் செய்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் மணி, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்யூனிஸ்ட் தலைமையிலான எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி, நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்ததால், எதிர்க்கட்சியினர் சபாநாயகரை தகாத வார்த்தையால் திட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இப்பதானே பூனைக்குட்டி வெளியே வருது.....என்னடா சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்  சதாசிவம்  கவர்னெர் ஆகிவிட்டாரே...கைமாறு எதுவும் திருப்பி செய்யவில்லையே என்று இருந்தேன்.....நிரூபிசுட்டாருயா சம்பந்தம் தனக்கு கவர்னெர் பதவி கிடைத்ததன் காரணத்தை....சுப்ரீம் கோர்ட்இல் எப்படி இவர் செயல்பட்டாரோ தெரியவில்லை....அரசியலை விரைவாக தெரிந்து கொண்டுவிட்டார்....இவருக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்.....அதற்குதான் அடிபோடுகிறார்...
இதனால், சபைக் காவலர்களை அழைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.கோபமடைந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சபைக் காவலர்களை தாக்கினர். பதிலுக்கு ஆளுங்கட்சியினரும் மோதலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளக்கம்:

இந்நிலையில், மாநில கவர்னர் சதாசிவத்தை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டை ஏற்கக் கூடாது என, கோரிக்கை விடுத்தார். இதேபோல், முதல்வர் உம்மன் சாண்டியும், கவர்னரை சந்தித்து விளக்கம் அளித்தார்.

மாநில கவர்னர் சதாசிவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்கள் நடந்து கொண்ட விதம் அதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. இதுதொடர்பான வீடியோ பதிவுகளை நான் பார்த்தேன். நடந்த நிகழ்வுகளைப் பார்த்தால், அரசியல் சாசன சட்டம், 356வது பிரிவின் கீழ், மாநில அரசை கவிழ்க்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க முடியும். அந்த அளவு மோசமாக நடந்து கொண்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறிஉள்ளார். கேரள கவர்னரின் இந்த அறிக்கை, அம் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது தினமலர்.com

கருத்துகள் இல்லை: