தற்போது பாஜகவின் ராமராஜ்ஜியத்தில் 380.75 MHz அளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம்
விற்பனை ஆகியிருக்கிறது. சிஏஜியின் மதிப்பீட்டின் படி விற்கப்பட்டிருக்க
வேண்டுமானால் 380.75 x 3350 என்று கணக்கு போட்டு 12.75 லட்சம் கோடி
ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்க வேண்டும்.இப்போது பதினொன்றரை லட்சம் கோடி வருமான இழப்பு என்று சிஏஜி அறிக்கை தரப்போவதில்லை.
ஊடகங்களும் பத்து லட்சம் கோடி ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ என்று கட்டுரைகள் வெளியிடப் போவதில்லை.ஆனால், 1.1 லட்சம் கோடிக்குதான் விற்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு MHz ஸ்பெக்ட்ரம் ரூ.267.51 கோடி ரூபாய்க்குதான் விற்பனை ஆகியிருக்கிறது.
+2வில் கணக்கில் ஃபெயிலு. அட்டெம்ப்ட்டும் முன்பைவிட படுமோசமாக வெற்றிவாய்ப்பை இழந்தது.
எனவே, நமக்கு ‘கணக்கு’ பண்ணத் தெரியாது.ஆனால்- பி.காம்., எம்.காம்., சி.ஏ., மாதிரி பெரிய கணக்கு படிப்பெல்லாம் படித்தவர்கள்தான் சி.ஏ.ஜி.யில் வேலை செய்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுவும் தப்பு போலிருக்கிறது. அங்கேயும் நம்மைபோல ‘கணக்குப் புள்ளைகள்’தான் இருக்கிறார்களோ என்னமோ? ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ என்று ஊடகங்களால் பெயர் சூட்டப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய சி.ஏ.ஜி. ரிப்போர்ட் குறிப்பிட்ட வருமான வரி இழப்பு அரசுக்கு என்ன? முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் அ.ராசா அவர்களது காலத்தில் பயன்பாட்டில் இல்லாமல் இராணுவத்திடம் இருந்த ஸ்பெக்ட்ரம் பெறப்பட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன.
வினோத்ராய் அவர்களது அறிக்கைப்படி…
52.7 MHz அளவுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் 12,385 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. ஆனால், வினோத்ராயின் மதிப்பீட்டின் படி ஒரு MHz ஸ்பெக்ட்ரம் 3,350 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு விற்கப்பட்டிருந்தால் வரக்கூடிய தொகைதான் 1.76 லட்சம் கோடி.
முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாயை இப்படிதான் தன்னுடைய பாக்கெட்டில் போட்டுக்கொண்டு போனார் என்று ஊடகங்களும், அடிவருடிகளும் தொடர்பிரச்சாரம் செய்தார்கள்.
தற்போது பாஜகவின் ராமராஜ்ஜியத்தில் 380.75 MHz அளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை ஆகியிருக்கிறது. சிஏஜியின் மதிப்பீட்டின் படி விற்கப்பட்டிருக்க வேண்டுமானால் 380.75 x 3350 என்று கணக்கு போட்டு 12.75 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், 1.1 லட்சம் கோடிக்குதான் விற்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு MHz ஸ்பெக்ட்ரம் ரூ.267.51 கோடி ரூபாய்க்குதான் விற்பனை ஆகியிருக்கிறது.
இதைதான் ஆரம்பத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். சிஏஜியின் உத்தேச மதிப்பீடு என்பது ‘கோழி மோசடி’ கணக்குதான்.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது பதினொன்றரை லட்சm கோடி வருமான இழப்பு என்று சிஏஜி அறிக்கை தரப்போவதில்லை.
ஊடகங்களும் பத்து லட்சம் கோடி ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ என்று கட்டுரைகள் வெளியிடப் போவதில்லை.
தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஊழல் செய்துவிட்டார் என்று யாரும் டிவிக்களில் அனலைஸ் செய்யப் போவதில்லை. அவர் திகாருக்கும் திக்விஜயம் செய்ய வேண்டியதில்லை.
அடிவருடிகளோ வாயையும் வயிற்றையும் பொத்திக் கொண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் என்ன ஸ்கோர் என்று நெட்டை நொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அ.ராசாவுக்கு எதிரான அநியாயத்தை ‘பார்ப்பன மோசடி’ என்று தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நம்மை ‘சாதிவெறியன்’ என்று முத்திரை குத்துகிறார்கள். சாதியை எதிர்ப்பவர்களும் சாதிவெறியர்கள் என்று விளங்கிக் கொள்ளப்படும் வித்தியாசமான டிக்ஷனரிகள் இந்தியாவில் மட்டுமே அச்சாகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக