புதன், 30 ஜூலை, 2014

மோடிக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கெர்ரி பாராட்டு !

வாஷிங்டன்:''இந்திய பிரதமர், நரேந்திர மோடியின், 'அனைவரையும் இணைத்துச் சென்று, அனைவருக்கும் முன்னேற்றத்தை வழங்குவது' என்ற கொள்கை பாராட்டுதற்குரியது; அது போல், அவரின் பதவியேற்பு விழாவுக்கு, பாகிஸ்தான் உட்பட அண்டை நாடுகளின் தலைவர்களை அழைத்தது மிகச் சிறந்த அணுகுமுறை,'' என, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், ஜான் கெர்ரி கூறினார்.ஒபாமாவுடன் சந்திப்பு:வரும் செப்டம்பரில், அமெரிக்கா செல்ல உள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேச உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், பேச்சுவார்த்தையின் குறிப்புகளை தயாரிக்கவும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், ஜான் கெர்ரி, இன்று இந்தியா வருகிறார். மோடி நல்லவரு வல்லவருன்னு கெர்ரி சொல்லிடாரு..கெர்ரி சொன்னா சரியாத்தான் இருக்கும்..வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான் நம்புங்க மக்களே...


இதை முன்னிட்டு, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் நேற்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, மேலும் கூறியதாவது:
இந்தியாவும், அமெரிக்காவும், உலகின் மிகவும் பழமையான பாரம்பரியம் கொண்ட நாடுகள். இந்த இரண்டு நாட்டு மக்களின், டி.என்.ஏ., மூலக்கூறில், புதியன கண்டுபிடிப்பும், தொழில்முனையும் உத்வேகமும் இயல்பாகவே அமைந்துள்ளன.இந்தியாவைச் சேர்ந்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், அமெரிக்க பல்கலைக் கழகங்களில் படித்து வருகின்றனர். பல லட்சம் பேர், அமெரிக்காவில் நிரந்தர குடியேற்றம் அடைந்துள்ளனர்.இந்தியாவுடன் அனைத்து துறைகளிலும் இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராக உள்ளது. பழமையான பாரம்பரியத்தை இந்தியா கொண்டிருந்தாலும், இளமையான தொழில் பட்டாளத்தை கொண்டு உள்ளது.

நவாஸ் மகிழ்ச்சி:

இந்தியாவில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீபை நான் பின்னர் சந்தித்த போது, அவரிடம் மகிழ்ச்சி காணப்பட்டது. இந்தியாவில் அவர் சிறப்பாக நடத்தப்பட்டதாக, சந்தோஷத்துடன் தெரிவித்தார். இரு நாடுகளும், மேலும் நட்புறவுடன் செயல்பட தேவையான அனைத்து உதவிகளையும், நாங்கள் வழங்கு வோம்.இவ்வாறு, அமைச்சர், ஜான் கெர்ரி கூறினார்  dinamalar.com

கருத்துகள் இல்லை: