இந்தியாவுடனான அமெரிக்க உறவு குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள அந்நாட்டு
வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவும்,
அமெரிக்காவும் சிறந்த பங்காளிகளாக இருக்க முடியும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து ஜான் கெர்ரி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜூடன்
சற்று முன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: -
இந்தியாவும் அமெரிக்காவும் பிரிக்க முடியாத கூட்டாளிகள். நம்மிருவருக்கும்
இடையே வலுவான நல்லுறவு எப்போதுமே உண்டு. உலக வர்த்தக மையத்தின் டி.எப்.ஏ
ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் முடிவில் இந்தியா தொடர்ந்து நிலையாக
இருக்கிறது. இந்தியாவில் அதிக அளவிலான ஏழை மக்கள் இருக்கிறார்கள். எனவே,
இந்தியாவின் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்க விரும்பவில்லை. எனினும், பாலி
ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று எனக்கு
நம்பிக்கை உள்ளது. ;
இவ்வாறு அவர் பேசினார் dailythanthi.com. அட கருமமே ஏற்கனவே நல்ல பங்காளிகளாக தான் இருக்காக அவிங்களும் பாகிஸ்தானும் கூட நல்ல பங்காளிகளாகதாய்ன் இருக்காக ! இஸ்ரேலும் பாலஸ்தீனும் அவிங்களும் கூட நல்ல பாங்காளிகலாகதான் இருக்காக ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக