கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும்
என்று தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகம்மது அலி அறிவித்தார்.
அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு அவர் தீர்ப்பை வெளியிட்டார்.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலையானவர்களில் 8 பேர் அதிகாரிகள், 3 பேர் ஆசிரியைகள். அவர்கள் விவரம் வருமாறு:–
1. பழனிச்சாமி (மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்). 2. நாராயணசாமி (மாவட்ட கல்வி அலு வலர்) 3. ராதாகிருஷ்ணன் (மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்) 4. பாலகிருஷ்ணன் (உதவி தொடக்க கல்வி அலுவலர்) 5. மாதவன் (உதவி தொடக்க கல்வி அலுவலர்) 6. பாலசுப்பிரமணியன் (உதவி தொடக்க கல்வி அலுவலர்) 7. தேவி (ஆசிரியை). 8. மகாலட்சுமி (ஆசிரியை). 9.அந்தோணியம்மாள் (ஆசிரியை).10.சத்தியமூர்த்தி (நக ராட்சி ஆணையர்), 11.முருகன் (கும்பகோணம் நகரமைப்பு அலுவலர்)
கும்பகோணம் தீ விபத்து வழக்கில் 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–
1.பள்ளியின் நிறுவனர் பழனிசாமி 2.பள்ளி தாளாளர் சரஸ்வதி 3.தலைமை ஆசிரியை சந்தானலெட்சுமி 4.சத்துணவு அமைப் பாளர் விஜயலட்சுமி 5.சமையல்காரர் வசந்தி 6.என்ஜினீயர் ஜெயச் சந்திரன் 7.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலாஜி 8. மாவட்ட தொடக்க கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம். 9. மாவட்ட தொடக்க கல்வி அலுவலக கண் காணிப்பாளர் தாண்டவன். 10.மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிபதி குற்ற விவரத்தை கூறினார். அப்போது நாங்கள் தவறு செய்யவில்லை, எந்த குற்றமும் செய்யவில்லை என்றனர்.
அவர்களுக்கான தண்டனை விபரம் மதியம் 1.15 மணிக்கு வெளியிடப்பட்டது.
பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, அவரது மனைவியும், பள்ளி தாளாளருமான சரஸ்வதி உள்பட 5 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.
மீதம் உள்ள 5 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக