வியாழன், 31 ஜூலை, 2014

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் உத்தரவு !

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.சென்னை தேனாம்பேட்டையில் குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வேணுகோபால் ரெட்டி என்பவர் வாங்கியிருந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சேஷாத்திரி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்ற மு.க.ஸ்டாலின், இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினார் ஆனால் புகார் மீது அடிப்படை ஆதாரம் இல்லாததால், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் ஜாமீன் கோரவும் இல்லை. இதனிடையே நிலத்தை விற்றவருக்கும், வாங்கியவருக்கும் சமரசம் ஏற்பட்டதுடன், வழக்கையும் புகார் கொடுத்தவரே திரும்ப பெற்றார்.


தமிழக அரசு இந்த வழக்கில் வழக்கில், சமரச தீர்வு எட்டப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை இன்று (வியாழன்) விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், ரமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட இந்த வழக்கில், தமிழக அரசுக்கு ஏன் இந்த அக்கறை என்று கேள்வி எழுப்பினர்.

இந்த மனுவில் அடிப்படை ஆதாரம் இல்லாததால், வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  nakkheeran.in

கருத்துகள் இல்லை: