சனி, 2 ஆகஸ்ட், 2014

தருண் விஜய் BJP Mp : சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வரலாறுகள் கற்பிக்க படவேண்டும்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
நாடாளுமன்ற மாநிலங்களவையில் முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கான நேரத்தில் பாரதிய ஜனதாக் கட்சி உறுப்பினரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அரசியல் சீடருமான தருண் விஜய், தமிழின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் எடுத்துக் கூறியுள்ளார். உலகின் தொன்மையான மொழியான தமிழுக்கு சிறப்பு செய்ய அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பாராட்டத் தக்கவையாகும்.
பொதுவாகவே வட இந்தியாவைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைவிட சிறந்த மொழி உலகில் இல்லை என்ற எண்ணம் உண்டு.
அவர்களின் செயல்களிலும், நாடாளுமன்றத்தில் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மத்திய அரசின் செயல்பாடுகளிலும் இது எதிரொலிக்கும்.
ஆனால், சமஸ்கிருதம் அதிகம் பேசப்படும் உத்தரகாண்டைச் சேர்ந்த தருண் விஜய், தமிழின் சிறப்புகளை நாடாளுமன்றத்தில் பட்டிய லிட்டதுடன், திருவள்ளுவர் நாளை இந்திய மொழிகள் நாளாக அறிவிக்க வேண்டும்; வட இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் ஒரு விருப்பப்பாடமாக கற்பிக்கப்பட வேண்டும்; அசோகர், விக்கிரமாதித்தர் ஆகியோர் மட்டும் தான் இந்தியப் பேரரசர்கள் என எண்ணிவிடக்கூடாது– சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உலகின் பல பகுதிகளை ஆண்டவர்கள் என்பதால் அவர்களின் வரலாறும் கற்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இந்த கோரிக்கைகள் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களால் கூட இதுவரை முன்வைக்கப்படவில்லை என்பதை நேர்மையுடன் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். தமிழ் மொழியின் தலைசிறந்த இலக்கியங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றின் மாண்புகளையும் நாடாளுமன்றத்தில் அவர் பதிவு செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, மற்ற தென்னிந்திய மொழிகள், வங்கமொழி பஞ்சாபி ஆகியவற்றின் சிறப்புகளையும், அவற்றுக்கு மரியாதை தர வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்த தருண் விஜய் தவறவில்லை. அவரது தமிழ் பற்றையும், பக்தியையும் நான் மனதார வரவேற்கிறேன்; மனம் திறந்து பாராட்டுகிறேன்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி நாடாளு மன்ற மாநிலங்களவையில் உரையாற்றும் போதும் தமிழை இந்தியாவின் 2–ஆவது தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்காக அப்போதே அவரை நான் பாராட்டியிருந்தேன். தமிழுக்கு நாங்கள் சலுகை கோரவில்லை; மாறாக உரிமை தான் கோருகிறோம். தமிழின் சிறப்புகளை தருண் விஜய் புரிந்து கொண்டதைப் போலவே மற்ற வட இந்திய தலைவர்களும், மத்திய ஆட்சியாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் தொடர்பான கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
1) தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக அறிவிக்க வேண்டும்.
2) திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.
3) திருவள்ளுவர் நாளை இந்திய மொழிகள் நாளாக அறிவிக்க வேண்டும்.
4) சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்.
5) இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கல்வி நிலையங்களில் தமிழ் விருப்பப்பாடமாக அறிவிக்கப்பட வேண்டும்.
6) செம்மொழியான தமிழ் மொழியின் ஆராய்ச்சிக்காக கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகி maalaimalar.com

கருத்துகள் இல்லை: